YouTurn

2009-14 வரையிலான கல்விக் கடனின் வட்டியை தள்ளுபடி செய்கிறார்களா ?

2009-14 வரையிலான கல்விக் கடனின் வட்டியை தள்ளுபடி செய்கிறார்களா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

12ம் வகுப்பிற்கு பிறகு மாணவர்கள் தங்களது உயர் கல்விப் படிப்பைத் தொடர்வதற்கு கல்விக் கடனிற்காக வங்கிகளை நாடுவது வழக்கம். அதேபோல் மாணவர்களுக்கு தேவையான கல்விக் கடன்களை வங்கிகளும் மாணவர்களின் தகுதிக்கேற்ப வழங்கி வருகின்றன. மாணவர்கள் தங்களது படிப்பை முடித்தப் பிறகு கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்த...

பரவிய செய்தி

கல்விக் கடன் வாங்கியவர்கள் அவரவர் வங்கிகளுக்கு சென்று தற்போது கொடுக்கும் படிவத்தைப் பூர்த்திச் செய்து தாசில்தாரிடம் கையெழுத்து வாங்கி 15ம் தேதிக்குள் கொடுக்க வேண்டும், அப்படி செய்தால் மட்டுமே 2009 முதல் 2014 வரையிலான வட்டி தள்ளுபடி. முடிந்த வரை நண்பர்களுக்கு பகிருங்கள்.

விரிவான விளக்கம்

12ம் வகுப்பிற்கு பிறகு மாணவர்கள் தங்களது உயர் கல்விப் படிப்பைத் தொடர்வதற்கு கல்விக் கடனிற்காக வங்கிகளை நாடுவது வழக்கம். அதேபோல் மாணவர்களுக்கு தேவையான கல்விக் கடன்களை வங்கிகளும் மாணவர்களின் தகுதிக்கேற்ப வழங்கி வருகின்றன. மாணவர்கள் தங்களது படிப்பை முடித்தப் பிறகு கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்த ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை கால அவகாசம் அளிக்கப்படுகின்றன.


 மேலும் பொறியியல் மற்றும் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் காலத்தில் பெற்ற கல்விக் கடனிற்கான வட்டித் தொகையை அரசே அளிக்கும் என்று 2009 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. இதில் உயர் கல்வி படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுடைய ஆண்டு வருமானம் 4.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் என்ற விதிமுறையும் இருந்தன.


இப்படி இருக்கையில், 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ம் தேதி மத்திய மனித வளத்துறை அமைச்சகம் வெளிட்ட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் உயர் கல்விப் படிப்பிற்கான கல்விக் கடன் பெற்றுள்ள மாணவர்கள் 2009  முதல் 2014 வரை வட்டிச் சலுகைப் பெற வங்கிகளில் விண்ணப்பிக்கலாம். இதனால் கல்விக் கடனின் வட்டியானது தள்ளுபடி செய்யப்படும். இது ஒரு முறை வழங்கப்படும் சலுகை என மத்திய அரசு அறிவித்தது.


 இந்த அறிவிப்பில், வட்டிச் சலுகை அளிக்க வேண்டிய தொகைப் பற்றிய விவரங்களை வங்கிகள் தங்களது இணையதளத்தில் அளிக்க வேண்டும் என்று அரசு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து வங்கிகளின் இணையதளமானது 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 முதல் 15 ம் தேதி வரை இயங்கும் என்றும், அதற்குள் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.



 மேலும், கல்விக் கடனின் வட்டிச் சலுகைப் பற்றிய அறிவிப்புகள் அனைத்தும் 2015 ஆம் ஆண்டில் ஊடகங்களில் வெளியாகின. ஆனால் இன்றளவும் கல்விக் கடனின் வட்டியை தள்ளுபடி செய்ய விண்ணபிக்கலாம் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகினறன. இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.  எனவே இது போன்ற செய்திகளை நன்கு அறிந்து பகிரவும்.

சுருக்கமாக

செப்டம்பர் மாதம் 2015 ஆம் ஆண்டிலேயே இச்சலுகையானது முடிவடைந்து விட்டது. ஆனால் இன்றளவும் இச்செய்திகள் பரவி வருகின்றன.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க