YouTurn

மதுரையில் உள்ள பள்ளி என எடிட் செய்யப்பட்டு பரவும் பாகிஸ்தானின் பெயர் பலகை!

மதுரையில் உள்ள பள்ளி என எடிட் செய்யப்பட்டு பரவும் பாகிஸ்தானின் பெயர் பலகை!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பாகிஸ்தானில் உள்ள ரஹீம் யார் கானில் அமைந்துள்ள இந்தப் பள்ளியின் உண்மையான பெயர் 'POLE STAR SCHOOL OF SCIENCES'. இதை தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை..!! சரிதான்...!! அதுவும் அறிவியல் தானே.??

X Link | Archive Link

விரிவான விளக்கம்

“மதுரையின் சாலையில் உள்ள பெயர் பலகையைப் பாருங்கள், இதுவும் அறிவியல் தானே” என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. பரவி வரும் புகைப்படத்தில், “P*RN STAR SCHOOL OF SCIENCES“ என்று குறிப்பிடப்பட்டிருப்பதையும் காண முடிகிறது. 



உண்மை என்ன? 


பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இது உண்மையான புகைப்படம் அல்ல என்பதை அறிய முடிந்தது. 



பாகிஸ்தானில் உள்ள ரஹீம் யார் கானில் அமைந்துள்ள இந்தப் பள்ளியின் உண்மையான பெயர் 'POLE STAR SCHOOL OF SCIENCES' என்பதையும், இந்தப் பள்ளி பேராசிரியர் ஜாவேத் அக்தர் வஹ்லாவால் நடத்தப்படுகிறது என்பதையும், “Lens“ ஊடகப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியின் மூலம் அறிய முடிந்தது. மேலும் அதில் உண்மையான புகைப்படத்தை எடிட் செய்து பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. 



இதே போன்று “Pakistan Factcheck” ஊடகத்தின் எக்ஸ் பக்கத்திலும், “POLE STAR SCHOOL OF SCIENCES” என்று குறிப்பிடப்பட்டுள்ள உண்மையான புகைப்படத்தை,  எடிட் செய்து தவறாகப் பரப்புகின்றனர் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்தனர். 



முடிவு: 


நம் தேடலில், பரவி வரும் புகைப்படத்தில் உள்ள பள்ளியின் உண்மையான பெயர் 'POLE STAR SCHOOL OF SCIENCES' என்பதையும், பெயர்பலகையின் புகைப்படத்தை எடிட் செய்து கடந்த 2020-ல் இருந்தே தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதையும் அறிய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க