யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
‘லியோ’ திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழை Edit செய்து, அதனை ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் என்று பொய்யாக பரப்பி வருகிறார்கள்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
நடிகர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் கடந்த ஜனவரி 9ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்காத காரணத்தால் வெளியாகும் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. மேலும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்குவது குறித்து பட தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் வாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்துள்ளனர்.
இந்நிலையில், ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கிவிட்டதாக சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்று பரப்பப்பட்டு வருகிறது.
Finally #JanaNayagan 🥳❤️🔥 pic.twitter.com/KpTOuU9zJJ
உண்மை என்ன?
பரப்பப்படும் தணிக்கை வாரிய சான்றிதழில், தேதி ‘09/10/2023’ என்றும் தயாரிப்பாளர் பெயர் ‘லலித் குமார், ‘Seven Screen Studio’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் படத்திற்கு 'U/A' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டில் லலித் குமார் தயாரிப்பில் வெளியான விஜய் திரைப்படம் குறித்து இணையத்தில் தேடியபோது, 2023 அக்டோபர் மாதம் ‘News 7’ செய்தித்தளத்தில் வெளியான செய்தி ஒன்றைக் காணமுடிந்தது. அதில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படத்திற்கு 'U/A' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும் அப்படம் 2023 அக்டோபர் 19 தேதி வெளியாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
#LeoCensoredUA 🧊🔥#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @duttsanjay @akarjunofficial @7screenstudio @Jagadishbliss @SonyMusicSouth #Leo pic.twitter.com/Nv8MiUZlbQ
’லியோ’ திரைப்படத்திற்கு 'U/A' சான்றிதழ் வழங்கப்பட்ட தகவலை ‘Seven Screen Studio’ தயாரிப்பு நிறுவனமும் தனது அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ பக்கத்தில் பகிர்ந்திருப்பதை காணமுடிகிறது.
#Leo censor certificate.
Runtime: 164 mins 27 secs. pic.twitter.com/oGmczg7zlw
மேலும் ’கார்த்திக் ரவிவர்மா’ என்ற திரைப்பட விநியோகஸ்தரும் 2023 அக்டோபர் மாதம் ‘லியோ’ திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழின் புகைப்படத்தை பகிர்ந்திருப்பதை காணமுடிகிறது.
இதிலிருந்து, 2023 அக்டோபர் மாதம் வெளியான ‘லியோ’ திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழை Edit செய்து, அதனை ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் என்று சமூக வலைதளத்தில் பொய்யாக பரப்பப்படுவது தெரிய வருகிறது.
முடிவு:
‘லியோ’ திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழை Edit செய்து, அதனை ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் என்று பொய்யாக பரப்பி வருகிறார்கள்.
