YouTurn

எடப்பாடி பழனிச்சாமிக்கு குரங்கு அம்மை நோய் உறுதி எனப் பரவும் போலி செய்தி!

எடப்பாடி பழனிச்சாமிக்கு குரங்கு அம்மை நோய் உறுதி எனப் பரவும் போலி செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு குரங்கு அம்மை நோய் பரிசோதனையில் உறுதி !



Archive link

விரிவான விளக்கம்

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டு உள்ளதாக புதிய தலைமுறை செய்தி கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

 





முன்னாள் அமைச்சரும், அதிமுக எம்எல்ஏவுமான செல்லூர் ராஜு, " குரங்கு அம்மை நோயால் அவதியுறும் எடப்பாடியை நலம் விசாரிக்காமல் கொரோனா என்று நாடகமாடும் பன்னீர்செல்வத்தை நலம்பெற வாழ்த்துவது ஒருதலைபட்சமான அரசியல் " என முதல்வர் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்ததாகவும் பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ? 

கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாக செய்திகளில் தகவல் வெளியானது. இதையடுத்து, தமிழ்நாட்டில் யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்து இருந்தார்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு குரங்கு அம்மை பாதிப்பு எனப் பரப்பப்படும் நியூஸ் கார்டு பற்றி புதிய தலைமுறை சமூக ஊடகப் பக்கங்களில் ஆராய்கையில், அப்படி எந்த பதிவும் இல்லை. இந்த நியூஸ் கார்டு புதியதலைமுறையின் பழைய நியூஸ் கார்டு வடிவில் உள்ளது.



இதுகுறித்து, புதியதலைமுறையின் இணையதள பிரிவைத் தொடர்பு கொண்டு பேசிய போது, " இது போலியானது. நாங்கள் வெளியிடவில்லை " எனத் தெரிவித்து இருந்தனர்.

அடுத்ததாக, ஜூனியர் விகடன் செய்தி பற்றி தேடுகையில, "எடப்பாடி பழனிச்சாமிக்கு குரங்கு அம்மை " என எந்த செய்தியையும் வெளியிடவில்லை. மாறாக, செல்லூர் ராஜு பற்றி தேடியப் போது, " ஓபிஎஸ், தன் செயலுக்கு இபிஎஸ்-ஸைச் சந்தித்து வருத்தம் தெரிவிக்க வேண்டும்..!" - செல்லூர் ராஜு " என்ற செய்தியே வெளியாகி இருக்கிறது. அதில், போலியான செய்தியை எடிட் செய்து உள்ளனர்.



முடிவு : 

நம் தேடலில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு குரங்கு அம்மை நோய் பரிசோதனையில் உறுதி எனப் பரப்பப்படும் செய்தி போலியானது என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

கர்நாடகாவில் கல்லூரி மாணவர்களில் 7000 பேருக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளதா? தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

கர்நாடகாவில் தற்போது 7000 மாணவர்கள் HIV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவது திரிக்கப்பட்ட தவறான செய்தி என்று கர்நாடக AIDS தடுப்பு அமைப்பு விளக்…

தவறானது

தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் போலீஸ் காலில் விழுந்து கெஞ்சினாரா CJP தலைவர் அபிஜீத் தீப்கே?

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு டெல்லி போலீஸ் காலில் விழுந்து அபிஜீத் தீப்கே கெஞ்சிய போது எடுக்கப்பட்ட வீட…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க