யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
குஜராத்தில் ராகுல்காந்தி கைது ! குஜராத்தில் குடிபோதையில் கார் ஓட்டிச் சென்ற போது கையும்களவுமாக பிடிபட்ட ராகுல் காந்தி .

Twitter link | Archive link

Twitter link | Archive link
விரிவான விளக்கம்
கதிர் நியூஸ் உடைய ட்விட்டர் பக்கத்தில், " குஜராத்தில் குடிபோதையில் கார் ஓட்டிச் சென்ற போது கையும் களவுமாக பிடிபட்ட ராகுல் காந்தி " என கார் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு ஒன்று பதிவிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை பார்த்தவர்கள் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி என நினைத்து கொண்டு கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும், இந்த நியூஸ் கார்டை சமூக வலைதளங்களில் பரப்பியும் வருகிறார்கள்.
உண்மை என்ன ?
குஜராத்தில் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டது தொடர்பாக தேடுகையில், " குஜராத் மாநிலத்தின் பானஸ் காம் எனும் பகுதியைச் சேர்ந்த ராகுல் காந்தி என்ற நபர் சூரத் காதொதரா சாலையில் காரில் குடித்து விட்டு தொல்லை கொடுத்ததாக போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்து விட்டதாக போலீஸ் தெரிவித்துள்ளதாக" ஆகஸ்ட் 24-ம் தேதி இந்தியா டுடே செய்தியில் வெளியாகி இருக்கிறது.

கதிர் நியூஸ் பாஜக காட்சியைச் சேர்ந்த நபரால் நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் தலைப்பை வைத்து opindia எனும் இணையதளமும் செய்தி வெளியிட்டு இருக்கிறது. இந்த இணையதளம் வலதுசாரி ஆதரவு செய்திகளை வெளியிடும் இணையதளம்.
குடிபோதையில் சிக்கிய " ராகுல் காந்தி என்ற நபர் கைது " என வெளிப்படையாக செய்தியை வெளியிடாமல் வைரலாக வேண்டும் என்பதற்காவும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும்" ராகுல் காந்தி " என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியை குறிப்பிடும் விதத்தில் செய்தியை வெளியிட்டு இருக்கிறார்கள். இதையறிமால், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கைது என நினைத்து பலரும் இந்த நியூஸ் கார்டை பரப்பி வருகிறார்கள்.
முடிவு :
நம் தேடலில், குஜராத்தில் குடிபோதையில் கார் ஓட்டிச் சென்ற போது கையும் களவுமாக பிடிபட்ட ராகுல் காந்தி எனும் செய்தி தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. குஜராத்தை சேர்ந்த ராகுல் காந்தி எனும் நபரை கைது செய்ததை தெளிவாக பதிவிடாததால் தவறாக பரப்பப்பட்டு வருகிறது.