YouTurn

வாகன ஓட்டுனர்களுக்கு ரூ.1000 நிவாரண தொகை அரசு வழங்குவதாக வதந்தி !

வாகன ஓட்டுனர்களுக்கு ரூ.1000 நிவாரண தொகை அரசு வழங்குவதாக வதந்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

ஓட்டுனர்களுக்கு அறிவிப்பு(ஓட்டுநர் உரிமத்துடன் பேட்ஜ் வைத்திருப்பது - கட்டாயம்) தமிழக அரசு அனைத்து வாகன ஓட்டுனர்களுக்கும் நிவாரண தொகை ரூ.1000 வழங்கப்பட இருக்கிறது.

விரிவான விளக்கம்

தமிழ்நாடு அரசு வாகன ஓட்டுனர்களுக்கு நிவாரண தொகையாக ரூ.1000 வழங்குவதாக அறிவிப்பு போஸ்டர் ஒன்று வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து வாசகர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?

இதுகுறித்து தேடுகையில், 2020 மார்ச் மாதம் வெளியான தினத்தந்தி செய்தியில், கட்டிடத் தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுனர் நல வாரியத்தில் உள்ள ஆட்டோ தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு சிறப்பு தொகுப்பாக தலா ரூ.1000ம் மற்றும் 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதாக " வெளியாகி இருக்கிறது.

ஆனால், சமீபத்தில் வாகன ஓட்டுனர்களுக்கு ரூ.1000 நிவாரண தொகை வழங்கப்படுவதாக எந்தவொரு அறிவிப்பும், செய்தியும் இல்லை. இதுதொடர்பாக, வாகன ஓட்டுநர் ஒருவரை தொடர்பு கொண்டு பேசுகையில், அப்படி எந்த நிவாரணமும் அளிக்கப்படவில்லை எனத் தெரிவித்து இருந்தார்.

இதே அறிவிப்பு படத்தை தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் வெளியிட்டது போன்று சமூக வலைதளங்களில் சுற்றவே அது தவறான செய்தி என சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Archive link 

TNDWWA ட்விட்டர் பக்கத்தில், " சங்கத்தின் சார்பாக சமூக வலைதளங்களில் வரும் கொரோனா நிவாரண நிதி செய்தி தவறான போலி செய்தி! யாரும் நம்ப வேண்டாம் சிரமத்திற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து கொள்கிறோம் " எனப் பதிவிட்டு உள்ளனர்.

முடிவு :

நம் தேடலில், தமிழக அரசு அனைத்து வாகன ஓட்டுனர்களுக்கும் நிவாரண தொகை ரூ.1000 வழங்கப்பட இருக்கிறது என பரவும் தகவல் போலி செய்தி என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க