
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
" திராவிடச் சிறகுகள் " எனத் தலைப்பிட்டு நடைபெற்ற புத்தக வெளியிட்டு விழாவில் மேடையில் கருப்பு சட்டை அணிந்த ஒருவரின் தலையை மட்டும் எடிட் செய்து இருக்கிறார்கள் எனத் தெளிவாய் தெரிகிறது.
நாம் தமிழர் கட்சியின் செய்தித்தொடர்பாளர் vjragav என்பவர் தன் ட்விட்டர் பக்கத்தில் இப்புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். பின்னர், அது ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படம் என யூடர்ன் ஆசிரியர் அவரின் ட்வீட்டை பகிர்ந்த உடன் அந்த ட்வீட் பதிவை vjragav நீக்கி இருக்கிறார்.
Twitter link
2019 செப்டம்பர் 18-ம் தேதி ராஜ நரசிம்மன் திமுக எனும் ட்விட்டர் பக்கத்தில், " மாநில இளைஞரணி செயலாளர் திரு. @Udhastalin அவர்கள் தற்போது திராவிடச்சிறகுகள் சார்பில் திருவாரூர்.அர.தருவிடம் எழுதிய “#திருவல்லிக்கேணி முதல் #திருவாரூர் வரை” நூல் அறிமுக விழாவில்...திருவாரூர் மாவட்ட ஆற்றல்மிகு செயலாளர் மாண்புமிகு பூண்டி கே கலைவாணன் MLA அவர்கள் " என வைரல் செய்யப்படும் நிகழ்ச்சியுடன் தொடர்புடைய புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது.
மாநில இளைஞரணி செயலாளர் திரு. @Udhaystalin அவர்கள் தற்போது திராவிடச்சிறகுகள் சார்பில் திருவாரூர்.அர.தருவிடம் எழுதிய “#திருவல்லிக்கேணி முதல் #திருவாரூர் வரை” நூல் அறிமுக விழாவில்...திருவாரூர் மாவட்ட ஆற்றல்மிகு செயலாளர் மாண்புமிகு #பூண்டி_கே_கலைவாணன்_MLA அவர்கள் @Udhaystalin_FC pic.twitter.com/Acu4oK5VhI
— Raja Narasimman DMK (@DmkNarasimman) September 28, 2019
Twitter link | Archive link
வைரல் செய்யப்படும் புகைப்படத்தின் உண்மையான புகைப்படம் கிடைக்கவில்லை. எனினும், இந்த ட்வீட் பதிவில், வைரல் செய்யப்படும் எடிட் புகைப்படத்தில் இருந்தது யார் என்பதை காணலாம்.

கூடுதல் தகவல் :

உண்மையான புகைப்படம்
