YouTurn

திரெளபதி முர்மு ஆர்எஸ்எஸ் தலைவரை சந்தித்து ஆசிப் பெற்றதாகப் பரவும் மார்ஃபிங் படம் !

திரெளபதி முர்மு ஆர்எஸ்எஸ் தலைவரை சந்தித்து ஆசிப் பெற்றதாகப் பரவும் மார்ஃபிங் படம் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

ஆர்எஸ்எஸ் தலைவரைச் சந்தித்து ஆசி பெற்றார் திரெளபதி முர்மு.



Archive link

விரிவான விளக்கம்

இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் பாஜக சார்பில் போட்டியிடும் திரெளபதி முர்மு அவர்கள் நாக்பூரில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்து ஆசிப் பெற்றதாக இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் இந்திய அளவில் வைரலாகி வருகிறது.



உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூசன், பத்திரிகையாளர் ப்ரக்னயா குப்தா உள்ளிட்ட பலரும் இப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு கேள்வி எழுப்பி இருந்தனர். ஆனால், அந்த ட்விட்டர் பதிவுகள் தற்போது நீக்கப்பட்டு உள்ளன.

உண்மை என்ன ? 

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பாரத மாதாவின் படத்தை வணங்குவது போல் நிற்கும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், மார்ச் 11-ம் தேதி  குஜராத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அகில பாரதிய பிரதிநிதி சபா சந்திப்பில் மோகன் பகவத் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஆர்எஸ்எஸ் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது. அந்த புகைப்படங்களில் மோகன் பகவத் அருகே வேறொரு நபரே இருக்கிறார்.



Twitter link | Archive link

திரெளபதி முர்மு வணங்கும் புகைப்படம், 2020-ல் ஜார்கண்ட் மாநில ஆளுநராக இருந்த போது அம்மாநில முதல்வர் ஹேமந்த் அவர்கள் சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இருந்து எடுத்துள்ளனர்.



Archive link 

2022-ல் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் குஜராத் சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் 2020-ல் ஜார்கண்டில் எடுக்கப்பட்ட திரெளபதி முர்மு படத்தை மார்ஃபிங் செய்து தவறாகப் பரப்பி வருகிறார்கள்.



முடிவு : 

நம் தேடலில், பாஜகவின் குடியரசுத்தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு நாக்பூரில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்து ஆசிப் பெற்றதாகப் பரப்பப்படும் புகைப்படம் மார்ஃபிங் செய்யப்பட்ட படம் என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

கர்நாடகாவில் கல்லூரி மாணவர்களில் 7000 பேருக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளதா? தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

கர்நாடகாவில் தற்போது 7000 மாணவர்கள் HIV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவது திரிக்கப்பட்ட தவறான செய்தி என்று கர்நாடக AIDS தடுப்பு அமைப்பு விளக்…

தவறானது

தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் போலீஸ் காலில் விழுந்து கெஞ்சினாரா CJP தலைவர் அபிஜீத் தீப்கே?

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு டெல்லி போலீஸ் காலில் விழுந்து அபிஜீத் தீப்கே கெஞ்சிய போது எடுக்கப்பட்ட வீட…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க