YouTurn

"கரூரில் இறந்தவர்களின் எண்ணிக்கையை அதிகமாகக் காட்ட நாடகம்" எனப் பரவும் தவறான செய்தி!

"கரூரில் இறந்தவர்களின் எண்ணிக்கையை அதிகமாகக் காட்ட நாடகம்" எனப் பரவும் தவறான செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

முன்னாள் அதிமுக அமைச்சர் M.R.விஜயபாஸ்கர் கரூர் அரசு மருத்துவமனைக்கு சென்று இறப்பு குறித்து பார்வையிட்ட போது, வீடியோவில் காட்டப்பட்டுள்ள பெண் உயிரோடு இருப்பதை தெளிவாகக் காண முடிகிறது. எனவே தனது குழந்தை இறந்த துக்கத்தில் இருந்த அந்த பெண்ணை மருத்துவமனைக்கு தூக்கி செல்லும் போது எடுக்கப்பட்ட வீடியோவை, தவறாகத் திரித்துப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

இந்த வீடியோவை நன்றாக பாருங்கள். சுடிதார் போட்டு அழுது கொண்டிருக்கும் இந்த பெண்ணை தான், மற்றொரு வீடியோவில் இறந்தது போல தூக்கி செல்வார்கள். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அதிகமாக காட்டவே இவ்வாறு செய்கிறனர். 



Instagram Link: 

விரிவான விளக்கம்

கரூரில் நேற்று (செப்.27) நடந்த தவெக பரப்புரை கூட்டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டு பலர் உயிரிழந்திருந்தனர். இன்னும் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று காலை வரையிலான நிலவரப்படி, இந்தச் சம்பவத்தால் 39 பேர் உயிரிழந்திருந்தனர். இப்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆக, பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.


இந்நிலையில் “வீடியோவை நன்றாக பாருங்கள் ஆரம்பத்தில் கூட்டத்தில் அமர்ந்து அழுது கொண்டிருந்த பெண்ணை, பின்னர் அவர் உயிரிழந்துவிட்டதாகக் கூறி தூக்கி செல்கிறனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அதிகமாக காட்டவே இவ்வாறு செய்கிறனர்” என்று கூறி இளைஞர் ஒருவர் பேசுவது போன்ற வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 


#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;">
#3897f0
; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);">
#F4F4F4
; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;">
#F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">
#F4F4F4
; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;">
#f4f4f4
; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)">
#F4F4F4
; border-right: 8px solid transparent; transform: translateY(16px);">
#F4F4F4
; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);">
#F4F4F4
; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;">
#F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">

#c9c8cd

; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;">#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by தமிழக வெற்றிக் கழகம் (@tvk_nextgen)


உண்மை என்ன? 


பரவி வரும் வீடியோவில் குறிப்பிட்டுள்ள சுடிதார் அணிந்த அந்த பெண் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், முன்னாள் அதிமுக அமைச்சர் M.R.விஜயபாஸ்கர் கரூர் அரசு மருத்துவமனைக்கு சென்று இறப்பு குறித்து பார்வையிட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ கிடைத்தது. 


அந்த வீடியோவில், பரவி வரும் வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ள அதே பெண், M.R.விஜயபாஸ்கரோடு பேசி கொண்டிருப்பதை தெளிவாகக் காண முடிகிறது. எனவே தனது குழந்தை இறந்த துக்கத்தில் இருந்த அந்த பெண்ணை, மருத்துவமனைக்கு தூக்கி செல்லும் போது எடுக்கப்பட்ட வீடியோவை, தவறாகத் திரித்துப் பரப்பி வருகின்றனர். 


#TVKVijay #TVKCampaign #தமிழகவெற்றிக்கழகம் pic.twitter.com/ZVM4SbVj95

— VinothKumar Govindasamy (@vinothAIADMKVLR) September 27, 2025


மேலும் கூட்டத்தில் பலரும் மயக்கமடைந்த நிலையில், மயக்கமடைந்தவர்களையும் தூக்கிக்கொண்டு பலர் மருத்துவமனைக்கு ஓடுவதை பல செய்திகளில் காண முடிகிறது. 



இந்நிலையில்,  கரூரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அதிகமாக காட்டவே இவ்வாறு செய்கிறனர் என்று கூறி தவறான செய்திகளைப் பலர் பரப்பி வருகின்றனர். 


முடிவு: 


நம் தேடலில், "கரூரில் இறந்தவர்களின் எண்ணிக்கையை அதிகமாகக் காட்ட நாடகம்" என்பது போல இளைஞர் ஒருவர் பேசியுள்ள கருத்துகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க