YouTurn

சிமென்ட் மூட்டைகளை அடுக்கி மழைநீர் வடிகால் கட்டுமானம் மேற்கொண்டதாகப் பரவும் வதந்தி !

சிமென்ட் மூட்டைகளை அடுக்கி மழைநீர் வடிகால் கட்டுமானம் மேற்கொண்டதாகப் பரவும் வதந்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

விரிவான விளக்கம்

சிமென்ட் மூட்டைகளை வைத்து கட்டுமானம் கட்டப்பட்டு இருப்பதாக ‘சவுக்கு சங்கர் ஆர்மி’ என்னும் டிவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அதே படத்தைச் சென்னை மழைநீர் வடிகால் பணியுடன் தொடர்புப்படுத்தியும் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. 



X link | Archive link 

உண்மை என்ன ? 

பரப்பப்படும் படத்தினை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடியதில், அமெரிக்காவைச் சேர்ந்த ‘டேவிட்சன்’ என்பவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக ‘Linked in’ தளத்தில் அப்படத்தினை பதிவிட்டுள்ளார். ஆனால், அப்படம் எங்கு எடுக்கப்பட்டது எனக் குறிப்பிடப்படவில்லை.



அதே புகைப்படத்தை ‘9gag’ என்னும் தளத்தில் கடந்த (நவம்பர்) 27ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. மேலும் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் ‘Reddit’, ‘டிவிட்டர்’ தளங்களிலும் அப்படத்தைப் பதிவிட்டுள்ளதைக் காண முடிகிறது. ஆனால், எங்கு எப்போது அப்படம் எடுக்கப்பட்டது என எதிலும் குறிப்பிடப்படவில்லை. 



அந்த படத்தில் உள்ள சிமென்ட் மூட்டைகளில் Berico’ மற்றும் ‘Megaflex’ என்கிற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனைக் கொண்டு தேடியதில் அந்நிறுவனம் துருக்கியை மையமாகக் கொண்டு இயங்குவதை அறிய முடிந்தது. அம்முட்டையிலும் ‘Made in Turkey’ என்றுள்ளது.



ஆனால், அப்படம் எங்கு எடுக்கப்பட்டது எனச் சரியான இடத்தினை கண்டறிய முடியவில்லை. கடந்த மாதம் முதலே உலகம் முழுவதும் பரவிய புகைப்படத்தை சென்னை வெள்ள பாதிப்பின் போது தவறாகப் பரப்பி வருகின்றனர். 

முடிவு : 

நம் தேடலில், சென்னை மழைநீர் வடிகால் கட்டுமானத்தில் சிமென்ட் மூட்டைகள் அடுக்கி கட்டுமான பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகப் பரவும் படம், கடந்த நவம்பர் 27ம் தேதி முதலே அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளதையும், அவை துருக்கியைச் சேர்ந்த சிமென்ட் நிறுவனங்களின் மூட்டைகள் என்பதையும் அறிய முடிகிறது. 
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க