YouTurn

கைவிடப்பட்ட குழந்தையை காப்பாற்றிய நாய் : புகைப்படங்கள் சரிதானா ?

கைவிடப்பட்ட குழந்தையை காப்பாற்றிய நாய் : புகைப்படங்கள் சரிதானா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

கலப்பு

சரிபார்க்கப்பட்ட கூற்று

பிறந்த குழந்தைகளைக் குப்பைத் தொட்டி, சாக்கடையில் தூக்கி வீசும் நிகழ்வுகள் சம காலத்திலும் அதிகம் நடைபெறுகிறது. அவ்வாறு தூக்கி வீசப்பட்ட குழந்தையை நாய் காப்பாற்றிய சம்பவம் இணையத்தில் பெருமையாகப் பார்க்கப்படுகிறது. எங்கெல்லாம் நடந்துள்ளது : தூக்கி வீசப்பட்ட குழந்தையை நாய் காப்பாற்றிய சம்பவங்கள்...

பரவிய செய்தி

தெருவில் கைவிடப்பட்ட தொப்புள்கொடி கூட நீக்கப்படாத பிறந்த குழந்தையை தெரு நாய் ஒன்று மீட்டுள்ளது. பிறந்த குழந்தையை தன் வாயில் கவ்விக் கொண்டு ஒருவரின் வீட்டின் முன் வைத்து விட்டு சென்றுள்ளது. தற்பொழுது அக்குழந்தை ஆரோக்கியமாக உள்ளது.

விரிவான விளக்கம்

பிறந்த குழந்தைகளைக் குப்பைத் தொட்டி, சாக்கடையில் தூக்கி வீசும் நிகழ்வுகள் சம காலத்திலும் அதிகம் நடைபெறுகிறது. அவ்வாறு தூக்கி வீசப்பட்ட குழந்தையை நாய் காப்பாற்றிய சம்பவம் இணையத்தில் பெருமையாகப் பார்க்கப்படுகிறது.

எங்கெல்லாம் நடந்துள்ளது :

தூக்கி வீசப்பட்ட குழந்தையை நாய் காப்பாற்றிய சம்பவங்கள் உண்மையாகவே பல இடங்களில் நடந்துள்ளது.

கென்யா : 



2005-ம் ஆண்டில் கென்யாவில் உள்ள காட்டில் கைவிடப்பட்ட இரண்டு வாரக் குழந்தை அங்கு சுற்றித் திரிந்த நாய் ஒன்றால் கண்டுபிடிக்கப்பட்டது. பின் அந்நாட்டின் தலைநகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு ஏஞ்சலா என பெயரிடப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பையில் துணியால் சுற்றி வைக்கப்பட்ட குழந்தையை நாய் கண்டுபிடித்த போது நாயின் உரிமையாளர் குழந்தையை சுத்தம் செய்த பின்னர் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளார்.

கென்யாவில் நடந்த இந்த சம்பவம் பிபிசி உள்ளிட்ட செய்திகளில் வெளியாகி உள்ளது.

அர்ஜென்டினா : 



2008-ல் அர்ஜென்டினாவில் உள்ள La plata-ல் 14 வயது பெண்ணால் கைவிடப்பட்ட குழந்தையை பெண் நாய் 50 மீட்டர் தூரம் தூக்கிக்கொண்டு வந்து தன் குட்டிகளுக்கு நடுவே வைத்துக் கொண்டுள்ளது. குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு வந்த நாயின் உரிமையாளர் குழந்தையை மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

பாங்காக் :

2013-ல் Pui என்ற நாய் பாங்காக்கின் தெரு முனையில் பிளாஸ்டிக் பையில் வைத்து கைவிடப்பட்ட குழந்தையை கண்டுபிடித்தது. உடனே பிளாஸ்டிக் பையுடன் குழந்தையை தன் உரிமையாளர் வீட்டின் முன் வைத்து சத்தமாக குரைத்து எச்சரிக்கை செய்தது.



பிளாஸ்டிக் பையை திறந்து பார்த்த உரிமையாளர் அதனுள்ளே பெண் குழந்தை இருப்பதை கண்டுள்ளார். உடனடியாக, குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. குழந்தையைக் காப்பாற்றிய pui ஹீரோவாக பாராட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

முடிவு :

பெற்றவரால் கைவிடப்பட்ட குழந்தைகளை நாய் கண்டுபித்தது மற்றும் காப்பாற்றிய சம்பவம் பல நாடுகளில் நடந்து உள்ளது. 2015-ல் இருந்தே நாய் குழந்தையை காப்பாற்றியதாக சமூக வலைதளங்களில் இப்படமானது பகிரப்படுகிறது.



ஆனால், பரவும் படத்தில் எங்கு, எப்பொழுது நடந்தது என்ற விவரங்கள் ஏதுமில்லை. தொப்புள்கொடி நீக்கப்படாத குழந்தையை நாய் வாயில் கவ்விக் கொள்ளும் புகைப்படங்கள் எங்கும் வெளிவராதவை. அதனைப் பற்றிய தகவல்கள் இல்லை.

இப்படம் மட்டுமே தவறானதாக இருக்கலாம். ஆனால், விலங்குகள் குழந்தைகளை காப்பாற்றிய சம்பவங்கள் உண்மை.

சுருக்கமாக

உலகின் பல நாடுகளில் கைவிடப்பட்ட பிறந்த குழந்தைகளை நாய் காப்பாற்றியதாக பல செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால், இணையத்தில் நாய் வாயில் குழந்தை இருப்பது போன்று பரவும் புகைப்படங்கள் உண்மையில்லை.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…

தவறானது

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.