YouTurn

திமுக ஆட்சியில் தமிழக காவல்துறையினர் ஜீயருக்கு சல்யூட் அடித்தனரா ?

திமுக ஆட்சியில் தமிழக காவல்துறையினர் ஜீயருக்கு சல்யூட் அடித்தனரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக ஜியருக்கு சல்யூட் அடித்த ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியின் காவல்துறை.

விரிவான விளக்கம்

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் திமுக ஆட்சியில் காவல்துறையினர் ஜீயர் ஒருவருக்கு சல்யூட் அடித்து மரியாதை வழங்குவதாக 30 நொடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.





Archive link 

உண்மை என்ன ? 

திமுக ஆட்சியில் தருமபுர ஆதீனம் பல்லக்கு விவகாரம், பசு மடம் , திருவாரூர் வீதிக்கு கலைஞர் பெயர் வைப்பது , பிரியாணி திருவிழாவில் மாட்டுக்கறி பிரியாணி தடை என பல விசயங்களுக்கு விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில், தமிழக காவல்துறை ஜீயருக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தி இருந்தால் ஊடகங்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் விவாதமாகி இருக்கும். ஆனால், அப்படி செய்திகள் ஏதும் வெளியாகவில்லை.



வைரல் செய்யப்படும் வீடியோ தொடர்பாக கீ வார்த்தைகளை கொண்டு தேடிய போது, " 2017-ல் vandeguruparamparaam எனும் இணையதளம் மற்றும் யூடியூப் சேனலில் " சிருங்கேரி சங்கராச்சாரியார் பாரதி தீர்த்த சுவாமிகள் கேரளாவில் யாத்ரா மேற்கொண்ட போது கேரள அரசு மரியாதை வழங்கியது. ஸ்ரீங்கேரி ஜகத்குரு ஒவ்வொரு முறையும் மாநில அரசு  விருந்தாளியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளார் " எனக் கூறப்பட்டு உள்ளது.



கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக கேரளாவில் சிருங்கேரி சங்கராச்சாரியாருக்கு காவல்துறை தரப்பில் அரசு மரியாதை வழங்கப்பட்ட வீடியோவை தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் ஜீயருக்கு சல்யூட் அடிப்பதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பி வருகிறார்கள்.

முடிவு : 

நம் தேடலில், திமுக ஆட்சியில் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக ஜீயருக்கு காவல்துறை சல்யூட் அடித்ததாகப் பரப்பப்படும் வீடியோ தவறானது. அந்த வீடியோ கடந்த 2017-ல் கேரளாவிற்கு சிருங்கேரி சங்கராச்சாரியார் வந்த போது அரசு மரியாதை அளித்த வீடியோ என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

கர்நாடகாவில் கல்லூரி மாணவர்களில் 7000 பேருக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளதா? தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

கர்நாடகாவில் தற்போது 7000 மாணவர்கள் HIV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவது திரிக்கப்பட்ட தவறான செய்தி என்று கர்நாடக AIDS தடுப்பு அமைப்பு விளக்…

தவறானது

தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் போலீஸ் காலில் விழுந்து கெஞ்சினாரா CJP தலைவர் அபிஜீத் தீப்கே?

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு டெல்லி போலீஸ் காலில் விழுந்து அபிஜீத் தீப்கே கெஞ்சிய போது எடுக்கப்பட்ட வீட…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க