YouTurn

திமுக வெற்றி பெற்றால் தைப்பூச விடுமுறை ரத்து செய்வதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு !

திமுக வெற்றி பெற்றால் தைப்பூச விடுமுறை ரத்து செய்வதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

திமுக வெற்றி பெற்றால் தைபூசத் திருநாள் விடுமுறை ரத்து செய்யப்படும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்



Facebook link | Archive link 

விரிவான விளக்கம்

தைப்பூச திருநாளிற்கு அரசு விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட காலமாக கோரிக்கையாகவே இருந்து வந்தது. இந்நிலையில், முதல்வர் பழனிச்சாமி தைப்பூச நாளிற்கு அரசு விடுமுறை அளிப்பதாக அறிவித்தார். இனி வரும் ஆண்டுகளிலும் அரசு விடுமுறை தொடரும் எனும் அறிவிப்பை வெளியிட்டார்.

தைப்பூச நாளிற்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டது தங்களுக்கு கிடைத்த வெற்றி என அரசியல் கட்சிகள் சொந்தம் கொண்டாடத் தொடங்கின.



இந்நிலையில், 2021 தேர்தலில் வெற்றிப் பெற்று திமுக ஆட்சிக்கு வந்தால் தைப்பூச திருநாள் விடுமுறை ரத்து செய்யப்படும் என மு.க.ஸ்டாலின் கூறியதாக எடிட் செய்யப்பட்ட நியூஸ் கார்டு ஒன்று வைரலாகி வருகிறது.



மு.க.ஸ்டாலின் தைப்பூச திருநாள் விடுமுறை ரத்து செய்யப்படும் என எங்கும் கூறவில்லை. ஜனவரி 5-ம் தேதி புதிய தலைமுறை செய்தியிலும் அவ்வாறான நியூஸ் கார்டு வெளியாகவில்லை.

மேலும் படிக்க : பாஜக ஆட்சிக்கு வந்தால் வேளாண் சட்டங்கள் ரத்து – எடிட் நியூஸ் கார்டு!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தைத் துவங்கி உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் கூறாத கருத்தை எடிட் செய்த போலியான நியூஸ் கார்டுகள், எடிட் வீடியோக்கள் அதிக அளவில் பரப்பப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க : 2500+1500=5000 என்பது ஸ்டாலின் கணக்கு எனப் பரப்பப்படும் எடிட் வீடியோ !
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க