YouTurn

திமுக ஆட்சியில் ரேசன் கடை விற்பனையாளர் பணிக்கு ரூ.7 லட்சம் பேரம் எனப் பரப்பப்படும் பழைய செய்தி !

திமுக ஆட்சியில் ரேசன் கடை விற்பனையாளர் பணிக்கு ரூ.7 லட்சம் பேரம் எனப் பரப்பப்படும் பழைய செய்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

ரேசன் கடை விற்பனையாளர் பதவிக்கு ரூ.7 லட்சம் பேரம்?. இதுதாண்டா உண்மையான நியூஸ். விடியல் தராங்க !தராங்க ! ன்னு சொல்லி சொந்த கட்சிக்காரனே ஓடுற அளவுக்கு தராங்க. 



Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

ரேசன் கடை விற்பனையாளர் பதவிக்கு ரூ.7 லட்சம் பேரம் என ஓய்வுபெற்ற அதிகாரிகள் புகார் தெரிவித்து உள்ளதாக வெளியான சன் நியூஸ் கார்டு ஒன்றை திமுக அரசை விமர்சித்து பாஜக ஆதரவாளர்கள் மற்றும் அதிமுகவினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த நியூஸ் கார்டில், " ரேசன் கடை விற்பனையாளர் பதவிக்கு ரூ.7 லட்சம் பேரம் ? தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கி எழுத்தர், ரேசன் கடை விற்பனையாளர் பதவிக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை லஞ்ச பேரம் நடப்பதாக ஓய்வுபெற்ற அதிகாரிகள் புகார்! ஒவ்வொரு வேலைக்கும் ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்டு முக்கியப்புள்ளி பேசிய ஆடியோ, இணைப்பதிவாளர்கள் வசம் இருப்பதாக தகவல்! " என இடம்பெற்று இருக்கிறது.



உண்மை என்ன ?  

சமூக வலைதளங்களில் பரப்பப்படும் சன் நியூஸ் கார்டில் எந்த தேதியில் செய்தி வெளியானது என்பது இடம்பெறவில்லை. ஆகையால், " ரேசன் கடை விற்பனையாளர் பதவிக்கு ரூ.7 லட்சம் பேரம் " என்ற வாக்கியத்தை கொண்டு தேடுகையில், அந்த சன் நியூஸ் கார்டு கடந்த 2021 ஜனவரி 9ம் தேதி வெளியாகி இருந்தது என்பதை அறிய முடிந்தது.



Twitter link | Archive link 

" ரேசன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் உதவியாளர் பணிக்கு லட்சக்கணக்கில் பேரம் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது " என 2021 ஜனவரி 17ம் தேதி தினகரன் இணையதளத்தில் செய்தி வெளியாகி இருக்கிறது. 

2021ம் ஆண்டு ஜனவரியில் ஆட்சியில் இருந்தது அதிமுக. அப்போது எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக வெளியான நியூஸ் காரில் வருடத்தை மட்டும் நீக்கி விட்டது தற்போது நடந்தது போல் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

மேலும் படிக்க : பொங்கல் பரிசு தொகை டாஸ்மாக் செல்வதாக பழைய புகைப்படத்தினை செய்தியாக வெளியிட்ட தினமலர் !

மேலும் படிக்க : திமுக அரசு மூதாட்டிக்கு உதவித் தொகையை நிறுத்தியதாக பழைய செய்தியை பரப்பிய சவுக்கு சங்கர் !

இதற்கு முன்பாக, கடந்த அதிமுக ஆட்சியில் வெளியான மூதாட்டி உதவித் தொகை செய்தியை சவுக்கு சங்கரும், 2021 ஜனவரியில் வெளியான கரும்புடன் மது வாங்கும் படத்தை தினமலரும் தற்போது நிகழ்ந்தது போல் பரப்பி இருந்தனர். அது குறித்தும் கட்டுரைகள் வெளியிட்டு இருக்கிறோம்.

முடிவு :  

நம் தேடலில், திமுக ஆட்சியில் ரேசன் கடை விற்பனையாளர் பதவிக்கு ரூ.7 லட்சம் பேரம் எனப் பரப்பப்படும் சன் நியூஸ் கார்டு சமீபத்தில் வெளியானது அல்ல, கடந்த 2021 ஜனவரி வெளியானது என்பதை அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வு அறை ஏற்படுத்தி கொடுத்துள்ள முதலமைச்சர் விஜய் என்று பொய் செய்தி பரப்பும் தவெகவினர்!

சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு 300 சதுர அடியில் கழிப்பறை வசதியுடன் ஓய்வு அறைகள் அமைக்கப்படும் என்று முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் நவம்பர் 15, 2025 அன்ற…

தவறானது

கர்நாடகாவில் கல்லூரி மாணவர்களில் 7000 பேருக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளதா? தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

கர்நாடகாவில் தற்போது 7000 மாணவர்கள் HIV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவது திரிக்கப்பட்ட தவறான செய்தி என்று கர்நாடக AIDS தடுப்பு அமைப்பு விளக்…

தவறானது

தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் போலீஸ் காலில் விழுந்து கெஞ்சினாரா CJP தலைவர் அபிஜீத் தீப்கே?

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு டெல்லி போலீஸ் காலில் விழுந்து அபிஜீத் தீப்கே கெஞ்சிய போது எடுக்கப்பட்ட வீட…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க