யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
திமுகவைச் சேர்ந்த செல்வகுமார் பணியில் இருந்த பெண் மருத்துவரை தாக்கியதாக, " Tamilnadu DMK party Leader Selva Kumar kicked Lady Doctor on duty. Forward this Video to all group until he will be punished. Shocking display of VIP Racism " என்ற வாசகத்துடன் புதியதலைமுறை செய்தியில் வெளியான வீடியோ...
பரவிய செய்தி
பணியில் இருந்த பெண் மருத்துவரை தாக்கும் தமிழ்நாடு திமுக கட்சி தலைவர் செல்வகுமார். அவருக்கு தண்டனை கிடைக்கும் வரை அனைத்து குரூப்களுக்கும் ஃபார்வர்டு செய்யவும்.

Facebook link | archive link

Facebook link | archive link
விரிவான விளக்கம்
திமுகவைச் சேர்ந்த செல்வகுமார் பணியில் இருந்த பெண் மருத்துவரை தாக்கியதாக, " Tamilnadu DMK party Leader Selva Kumar kicked Lady Doctor on duty. Forward this Video to all group until he will be punished. Shocking display of VIP Racism " என்ற வாசகத்துடன் புதியதலைமுறை செய்தியில் வெளியான வீடியோ முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் பெண் மருத்துவரை தாக்கிய திமுக தலைவர் என இவ்வீடியோ ஆங்கிலம் மற்றும் தெலுங்கு இணையதள செய்தியில் பரவி உள்ளது. அதே பதிவை கொரோனா வைரஸ் தருணத்திலும் பகிர்ந்து வருகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது.

Twitter link | archive link

News link | archive link
2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், பியூட்டி பார்லரில் புகுந்து பெண்ணை சரமாரியாக தாக்கும் திமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலரின் வைரல் வீடியோ என தற்போது வைரலாகும் சிசிடிவி காட்சிகள் செய்திகளில் வெளியாகியது.
Youtube link | archive link
" பெரம்பலூரில் பியூட்டி பார்லரில் தாக்கப்பட்ட பெண்ணுக்கும் செல்வகுமாருக்கும் இடையே பணத்தகராறு இருந்ததாக கூறப்படும் நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ம் தேதியன்று அப்பெண்ணின் பியூட்டி பார்லருக்குள் குடிபோதையில் நுழைந்த செல்வக்குமார் அவரை கடுமையாகத் தாக்கியுள்ளார். அந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. பியூட்டி பார்லர் நடத்தி வரும் பெண்ணைத் தாக்கிய செல்வகுமாரை போலீஸ் கைது செய்துள்ளனர். அவரை திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக அக்கட்சி தலைமை அறிவித்தது " என 2018-ல் செய்திகளில் வெளியாகியது.

2018-ல் பியூட்டி பார்லர் நடத்தி வந்த பெண்ணை தாக்கிய திமுகவின் முன்னாள் கவுன்சிலரின் வீடியோ பிற மொழிகளில் மருத்துவரை தாக்கியதாக வைரலாகியது. இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே வீடியோ வைரலாகி வருகிறது. பெண்ணை தாக்கிய திமுக முன்னாள் கவுன்சிலர் மீதும், அக்கட்சி மீதும் சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்தன. அக்கட்சியை சேர்ந்தவர்கள் செய்யும் தவறுகள் சிசிடிவி காட்சிகளின் மூலம் வெளியாகி கிண்டலுக்கும், கண்டனத்திற்கும் உள்ளானார்கள்.
முடிவு :
2018-ல் பியூட்டி பார்லர் நடத்தி வந்த பெண்ணை திமுகவின் முன்னாள் கவுன்சிலர் தாக்கிய சிசிடிவி காட்சி வெளியான புதியதலைமுறையின் செய்தி வீடியோ பெண் மருத்துவரை தாக்கியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரண்டு ஆண்டுகளாக தவறாக பரவி வருகிறது.