யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
சாலையோர கொடிக்கம்பத்தில் மாலையுடன் வைக்கப்பட்டு இருக்கும் கலைஞர் கருணாநிதி படத்தை ஒரு வயதான பாட்டி கையை நீட்டி சோகத்துடன் பார்ப்பது போல் எடுக்கப்பட்டு இருக்கும் புகைப்படத்தை " என் தலைவர் சம்பாதித்த மிகப்பெரிய சொத்து... " எனக் கூறி திமுகவினர் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
வைரல் செய்யப்படும் படத்தை யார் யாரெல்லாம் பதிவிட்டு இருக்கிறார்கள் என்பது குறித்து தேடிய போது, கடந்த 2020 டிசம்பர் 6ம் தேதி எம்.எஸ்.சகோதரர்கள் எனும் திமுகவைச் சேர்ந்தவரின் முகநூல் பக்கத்திலும் இப்புகைப்படம் பதிவாகி இருக்கிறது.

Facebook link
உண்மை என்ன ?
திமுகவினர் பகிரும் படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்த போது, " 2020 ஜனவரி 17ம் தேதி எம்.ஜி.ஆர் பிறந்தநாளைக் குறிப்பிட்டு இப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு உள்ளனர் ". ஆனால், இப்புகைப்படத்தில் பாட்டியின் முன்பாக எம்.ஜி.ஆர் படமே மாலையுடன் உள்ளது.
Twitter link
2020 ஜனவரி 17ம் தேதி, " எம்ஜிஆர் அது பெயர் அல்ல.. தமிழகத்தின் அரை நூற்றாண்டுக்கான வரலாறு " எனும் தலைப்பில் நக்கீரன் வெளியிட்ட கட்டுரையிலும் இப்படம் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு கொடி கம்பத்தில் மாலையுடன் வைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் படத்தில் கலைஞர் கருணாநிதியின் படத்தை எடிட் செய்து வைத்து உள்ளதை தெளிவாய் காண முடிகிறது.

மேலும் படிக்க : ஸ்டெர்லைட் ஆலையை தொடங்கி வைத்தது கலைஞரா ?
முடிவு :
நம் தேடலில், என் தலைவர் சம்பாதித்த மிகப்பெரிய சொத்து என திமுகவினர் பரப்பும் புகைப்படத்தில் பாட்டியின் முன்பாக இருப்பது கலைஞர் கருணாநிதியின் படம் அல்ல, அங்கு எம்.ஜி.ஆர் படமே இருந்துள்ளது. எம்.ஜி.ஆர் படத்தின் மீது கலைஞரின் படத்தை எடிட் செய்து உள்ளனர் என அறிய முடிகிறது.
என் தலைவர் சம்பாதித்த சொத்து... pic.twitter.com/KrYJmgZBlf
— ஜெயசந்திரன் திமுக 🖤♥️ (@jaya2016maha) December 9, 2022
என் தலைவர் #கலைஞர் சம்பாதித்த மிகப்பெரிய சொத்து... 🖤❤️ pic.twitter.com/eLB1NPp2VY
— Sridhar Radhakrishnan (@SriDhar37669848) December 9, 2022
வைரல் செய்யப்படும் படத்தை யார் யாரெல்லாம் பதிவிட்டு இருக்கிறார்கள் என்பது குறித்து தேடிய போது, கடந்த 2020 டிசம்பர் 6ம் தேதி எம்.எஸ்.சகோதரர்கள் எனும் திமுகவைச் சேர்ந்தவரின் முகநூல் பக்கத்திலும் இப்புகைப்படம் பதிவாகி இருக்கிறது.

Facebook link
உண்மை என்ன ?
திமுகவினர் பகிரும் படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்த போது, " 2020 ஜனவரி 17ம் தேதி எம்.ஜி.ஆர் பிறந்தநாளைக் குறிப்பிட்டு இப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு உள்ளனர் ". ஆனால், இப்புகைப்படத்தில் பாட்டியின் முன்பாக எம்.ஜி.ஆர் படமே மாலையுடன் உள்ளது.
Do we need a caption for this pic. #MGRBirthday #MGR103 pic.twitter.com/6DuDdFDe7x
— bharathnt (@bharath1) January 17, 2020