YouTurn

இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பேசினால் திமுக தோல்வி அடையும் என பி.கே கூறினாரா ?

இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பேசினால் திமுக தோல்வி அடையும் என பி.கே கூறினாரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

2021 சட்டசபைத் தேர்தலில் திமுக பிரசாந்த் கிஷோர் உடைய ஐ-பேக் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளதாக மு.க.ஸ்டாலின் தன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். அந்நிறுவனமும் அதைப் பகிர்ந்து இருத்தது. இந்த தகவல் வெளியான பிறகு, " இனி மேற்கொண்டு இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக திமுக பேசி...

பரவிய செய்தி

விரிவான விளக்கம்

2021 சட்டசபைத் தேர்தலில் திமுக பிரசாந்த் கிஷோர் உடைய ஐ-பேக் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளதாக மு.க.ஸ்டாலின் தன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். அந்நிறுவனமும் அதைப் பகிர்ந்து இருத்தது.

இந்த தகவல் வெளியான பிறகு, " இனி மேற்கொண்டு இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக திமுக பேசி வந்தால் 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைவது உறுதி " என பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளதாக தந்தி டிவி நியூஸ் கார்டு ஒன்று PMK Forever என்ற முகநூல் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது.



இஸ்லாமியர்களுக்கு ஆதரவு தெரிவித்தால் திமுக தேர்தலில் தோல்வி அடையும் என பிரசாந்த் கிஷோர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்ததாக தந்தி டிவி உள்ளிட்ட செய்திகள் எதிலும் வெளியாகவில்லை. தந்தி டிவி செய்தியின் நியூஸ் கார்டில் எடிட் செய்து தவறான செய்தியை பரப்பி வருகின்றனர்.

அரசியல் சார்ந்து தவறான தகவல்களையும், கிண்டல்களை உருவாக்கவும் செய்தி நிறுவனங்களின் நியூஸ்கார்டுகளில் போலியான செய்திகளை எடிட் செய்தி சமூக வலைதளங்களில் பல கட்சி ஆதரவாளர்கள் பரப்பி வருகின்றனர் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…