YouTurn

திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி 11வது இடத்திற்கு தள்ளப்பட்டதா ?

திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி 11வது இடத்திற்கு தள்ளப்பட்டதா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

வளர்ச்சி பெறும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 3-வது இடத்திலிருந்து 11-வது இடத்திற்கு தள்ளப்பட்டது.



Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

திமுகவின் 6 மாத ஆட்சியில், வளர்ச்சி பெறும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 3-வது இடத்தில் இருந்து 11-வது இடத்திற்கு தள்ளப்பட்டது என வெள்ளை அறிக்கை கூறுவதாக நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.





உண்மை என்ன ? 

கடந்த 6 மாத திமுகவின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி பின்னுக்கு தள்ளப்பட்டு உள்ளதாக வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டில் 2021 ஆகஸ்ட் 09-ம் தேதி எனக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அப்போது திமுக ஆட்சிக்கு வந்து 3 மாதங்கள் ஆகி இருந்தன.



Facebook link  

திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு பதவியேற்ற பிறகு கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியின் நிதிநிலைமை தொடர்பாக வெளிப்படையான விளக்கத்தை தரும் வெள்ளை அறிக்கையை 2021 ஆகஸ்ட் 9-ம் தேதி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்.



வெள்ளை அறிக்கையில், " சென்னை பொருளியல் கல்வி நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட மாநிலங்களுக்கிடையேயான ஒப்பீட்டு ஆய்வின்படி, 2004-05 முதல் 2011-12 வரையுள்ள காலத்திற்கான சராசரி வளர்ச்சியில், தமிழ்நாடு பெரிய மாநிலங்களில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. ஆனால், 2012-13 முதல் 2018-19 வரையுள்ள காலத்தில் தமிழ்நாடு 11-வது இடத்தை அடைந்ததுடன், அதன் சராசரி வளர்ச்சியும், முந்தைய 7 ஆண்டுகளின் வளர்ச்சியான 10.3 சதவீதத்தைக் காட்டிலும் 3.2 சதவீதப் புள்ளிகள் குறைவாக, அதாவது 7.1 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை மிகவும் கவலையளிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது " எனத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

முடிவு : 

நம் தேடலில், திமுகவின் 6 மாத ஆட்சியில் வளர்ச்சி பெறும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 3-வது இடத்திலிருந்து 11-வது இடத்திற்கு தள்ளப்பட்டது எனப் பரவும் தகவல் தவறானது.

2021 ஆகஸ்ட் மாதம் கடந்த அதிமுக ஆட்சி குறித்து வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை குறித்த நியூஸ் கார்டை தற்போது தவறாக பரப்புகின்றனர்.

2012-13 முதல் 2018-19 வரையிலான அதிமுக ஆட்சிக்கு காலத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சி பின்னோக்கி சென்றதாக திமுக அரசு வெளியிட்ட புள்ளி விவரத்தை, திமுகவின் 6 மாத ஆட்சியில் நிகழ்ந்ததாக வதந்தி பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க