YouTurn

திமுக ஆட்சியில் பெண்களுக்கு மது விருந்து நடப்பதாகப் பரப்பப்படும் பழைய வீடியோ !

திமுக ஆட்சியில் பெண்களுக்கு மது விருந்து நடப்பதாகப் பரப்பப்படும் பழைய வீடியோ !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

நானும் ஏதோ திருவிளக்கு பூஜை நடக்கிறது என்று நினைத்தேன் ??? ஆனால் இது என்ன கலாச்சாரம் என்று தெரியவில்லை திராவிட மாடல் ஆட்சியில் பெண்களுக்கு மது விருந்து தீஸ் ஈஸ் திராவிட மாடல்.

Twitter Link | Archive Link 

விரிவான விளக்கம்

பெண்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பீர் பாட்டில் உடன் அமர்ந்து இருக்கும் 12 நொடிகள் கொண்ட வீடியோ தமிழ்நாட்டில் திருமண விழா ஒன்றில் நிகழ்ந்ததாக பரவி வருகிறது. இது தான் திராவிட மாடல் ஆட்சியா என்பது போன்ற விமர்சனங்களை முன்வைத்து இந்த வீடியோவை பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை என்ன ?

நிகழ்ச்சி ஒன்றில் பீர் பாட்டில்கள் உடன் பெண்கள் அமர்ந்து இருக்கும் வீடியோ கடந்த சில ஆண்டுகளாகவே இணையத்தில் வெவ்வேறு மாநிலங்களை குறிப்பிட்டு பரப்பப்பட்டு வருகிறது.

இதுகுறித்து இணையத்தில் தேடியபொழுது, அந்த வீடியோ 4 வருட முன் எடுக்கப்பட்டது என தெரியவருகிறது. மேலும், NTV Telugu எனும் செய்தி தளம் இதனை 2019ம் நவம்பர் மாதமே தனது யூடூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.



News Link

இதற்கு முன்பாக, 2018ம் ஆண்டு மே மதம் 11ம் தேதியே இந்த வீடியோவை ஒருவர் தனது யூடூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆனால், எங்கு எடுக்கப்பட்டது என எந்த விவரமும் இல்லை.



Video Link 



2018ம் ஜூலை மாதம் "India Telangana women marriage beer party" என்ற தலைப்பில் இந்த வீடியோவை ஒருவர் பதிவிட்டுள்ளார். 2018 மே மாதம் அமர்உஜாலா எனும் இந்தி செய்தி இணையதளத்தில், " மகாராஷ்டிராவின் பந்திராவில் பிரசாதமாக மது மற்றும் சிக்கன் பெண்களுக்கு வழங்கப்படுவதாகக் கூறி இவ்வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவதாக " வெளியாகி இருக்கிறது. ஆனால், அதிலும் உறுதியான தகவல் இல்லை. இப்படி 2018ம் ஆண்டு இந்த வீடியோவை பலர் யூடூபில் பதிவிட்டுள்ளார்.

இதுமட்டுமின்றி, பாஜக ஆளும் கர்நாடகா மாநிலத்தில் உள்ள குல்பர்கா நகரில் கறி விருந்தில் மதுவானது பெண்களுக்கு பரிமாறப்பட்டதாகவும் இவ்வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.



இப்படி இணையத்தில் வைரலான பழைய வீடியோவை எடுத்து தமிழ்நாடு, கர்நாடகா என மாற்றி மாற்றி பரப்பி வருகிறார்கள்.

12 நொடிகள் மட்டுமே கொண்ட வீடியோவில் காணப்படும் பெண்கள் சேலை அணிந்திற்கும், பூ உள்ளிட்டவையை கவனிக்கையில் தென்னிந்திய மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் போன்றே உள்ளனர்.

முடிவு :

நம் தேடலில், தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் பெண்களுக்கு மது விருந்து எனப் பரப்பப்படும் வீடியோ தவறானது. இந்த வீடியோ கடந்த சில ஆண்டுகளாகவே சமூக வலைதளங்களில் சுற்றி வரும் வீடியோ என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

கர்நாடகாவில் கல்லூரி மாணவர்களில் 7000 பேருக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளதா? தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

கர்நாடகாவில் தற்போது 7000 மாணவர்கள் HIV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவது திரிக்கப்பட்ட தவறான செய்தி என்று கர்நாடக AIDS தடுப்பு அமைப்பு விளக்…

தவறானது

தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் போலீஸ் காலில் விழுந்து கெஞ்சினாரா CJP தலைவர் அபிஜீத் தீப்கே?

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு டெல்லி போலீஸ் காலில் விழுந்து அபிஜீத் தீப்கே கெஞ்சிய போது எடுக்கப்பட்ட வீட…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க