YouTurn

இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் மரணம் என ஃபேஸ்புக் வதந்தி !

இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் மரணம் என ஃபேஸ்புக் வதந்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இயக்குனர், நடிகர் என திரைத்துறையில் பன்முகத்தன்மைக் கொண்டவராக இருந்து வருபவர் ஆர்.சுந்தர்ராஜன். 70 வயதான ஆர்.சுந்தர்ராஜன் அவர்கள் உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார் என வதந்தி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, இணையத்தில் வைரலாகும் தகவல்கள் அனைத்தும் வதந்தியே. தனது தந்தை நலமாக...

பரவிய செய்தி

R.சந்தர்ராஜன் அவர்கள் இன்று மாரடைப்பால் அகாலமரணம் அடைந்தார் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

விரிவான விளக்கம்

இயக்குனர், நடிகர் என திரைத்துறையில் பன்முகத்தன்மைக் கொண்டவராக இருந்து வருபவர் ஆர்.சுந்தர்ராஜன்.  70 வயதான ஆர்.சுந்தர்ராஜன் அவர்கள் உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார் என வதந்தி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையடுத்து, இணையத்தில் வைரலாகும் தகவல்கள் அனைத்தும் வதந்தியே. தனது தந்தை நலமாக உள்ளார் என ஆர்.சுந்தர்ராஜன் அவர்களின் மகன் அசோக் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.



" என்னுடைய தந்தை ஆர்.சுந்தர்ராஜன் உடல் நலத்துடன் நலமாக உள்ளார். தற்போது சென்னை படப்பிடிப்பில் உள்ளார். தயவு செய்து வதந்திகளை பரப்ப வேண்டாம் " என தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்.சுந்தர்ராஜன் , நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பது குறித்து கடுமையாக விமர்சித்து இருந்தார். இதையடுத்து, அவர் இறந்து விட்டாதாக வதந்திகள் பரவத் தொடங்கி உள்ளன.

பிரபலமானவர்கள் இறந்து விட்டதாக வதந்திகள் பரப்புவது தொடர்ந்து பார்க்க முடிகிறது. சில நேரங்களில் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும் வதந்திகளை பரப்புகின்றனர்.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…