YouTurn

ஃபேஸ்புக் வதந்தியை செய்தியாக வெளியிட்ட தினமலர் !

ஃபேஸ்புக் வதந்தியை செய்தியாக வெளியிட்ட தினமலர் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பிரபல தமிழ் செய்தித்தாளான தினமலரின் இணையதளத்தில் வாரமலர் பிரிவில் " நாசா வியந்த, மீனாட்சி அம்மன் கோவில்! " என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியாகி இருந்தது. அதில், மீனாட்சி அம்மன் கோவிலை செயற்கைக்கோள் மூலம் ஆராய்ந்த பொழுது பல அற்புதங்கள் நிறைந்து இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்ததாக...

பரவிய செய்தி

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை செயற்கைக்கோள் மூலம் கண்காணித்த போது, பல அறிவியல் அற்புதங்கள் அங்கு மறைந்திருந்ததை, கண்டறிந்தனர், 'நாசா' விஞ்ஞானிகள்.



 

விரிவான விளக்கம்

பிரபல தமிழ் செய்தித்தாளான தினமலரின் இணையதளத்தில் வாரமலர் பிரிவில் " நாசா வியந்த, மீனாட்சி அம்மன் கோவில்! " என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியாகி இருந்தது. அதில், மீனாட்சி அம்மன் கோவிலை செயற்கைக்கோள் மூலம் ஆராய்ந்த பொழுது பல அற்புதங்கள் நிறைந்து இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்ததாக கூறப்பட்டுள்ளது.



இதை முன்பே பார்த்து இருப்பது போன்று தோன்றும் அல்லாவா ! ஆம், சில தினங்களுக்கு முன்பு முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் வைரலானப் பதிவை தினமலர் செய்தித்தளத்தில் தற்பொழுது வெளியிட்டு உள்ளனர்.

விரிவாக படிக்க : #நாசா_வியந்தது என வைரலாகும் மீனாட்சி அம்மன் கோவில் பதிவு|உண்மை என்ன ?

ஜூன் 2-ம் தேதி youturn இணைய தளத்தில் இச்செய்திகளில் உண்மை இல்லை, நையாண்டித்தனமாக ஒருவர் முகநூலில் பதிவிட்ட பதிவை வைரலாக்கி இருந்தனர் என ஆதாரங்களுடன் வெளியிட்டு இருந்தோம். இந்த பதிவை முதலில் மே 31-ம் தேதி நகைச்சுவை நடிகரான வெங்கடேஷ் ஆறுமுகம் தன் முகநூலில் பதிவிட்டு இருந்தார்.



மீனாட்சி அம்மன் கோவிலில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது, ஜெர்மன் விஞ்ஞானி கெப்ளர் ஆராய்ச்சியை மேற்கொண்டார் என்பதற்கு ஆதாரங்கள் ஏதுமில்லை. உண்மைத்தன்மை இல்லாத செய்தி என நாம் முன்பே வெளியிட்டதை தற்பொழுது பிரபல செய்தித்தளத்தில் " நாசா வியந்த, மீனாட்சி அம்மன் கோவில்!" என்ற தலைப்பில் வியப்புடன் வெளியிட்டு உள்ளனர்.

மேலும் படிக்க : திருநள்ளாரில் செயற்கைக்கோள்கள் 3 நிமிடங்கள் செயலிழந்ததா ?

இன்னும் எத்தனை முறை தான் #நாசா_வியந்தது என்று ஆதாரமில்லாத தகவல்களை பகிர்வார்கள் எனத் தெரியவில்லை. திருநள்ளார், மீனாட்சி அம்மன் என கோவில்களை நாசாவுடன் இணைத்து தவறான செய்திகளை வெளியிடுகின்றனர்.

இப்படியான செய்திகளை பார்க்கும் மக்கள் உண்மை என நினைக்க வாய்ப்புகள் அதிகம். அப்படி பார்க்கும் செய்திகளில் ஆதாரங்கள் இல்லாத பட்சத்தில் மக்களே கேள்விகளை எழுப்ப முன்வர வேண்டும்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…

பொய்

டெல்லி மாணவர்கள் போராட்டத்தை ஆதரிப்பாக ‘வங்கதேச ஜமாஅத்-இ-இஸ்லாமி’ கட்சி அறிக்கை வெளியிட்டதா?

‘வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி’ பெயரில் பரப்பப்படும் இந்த அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டது என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.

பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…