YouTurn

நேருவை வித்யானந்த் விதே அறைந்ததாகப் பரவும் பொய் செய்தி!

நேருவை வித்யானந்த் விதே அறைந்ததாகப் பரவும் பொய் செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்தியாவின் முன்னாள் பிரதமர் நேரு இந்து ஆர்ய சமாஜ் மக்கள் இந்தியாவின் அகதிகள் என்று கூறியதற்காக வித்யானந்த் விதே என்பவர் நேருவை அறைந்ததாகப் பரவும் புகைப்படம் குறித்த தகவல் உண்மையல்ல.

பரவிய செய்தி

நேருவை ஸ்வாமி வித்யானந்த் விதேஹ் முகத்தில் பலமாக அறைந்தபோது. காரணம்..



X Link | Archive Link

விரிவான விளக்கம்

முன்னாள் இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு விழா ஒன்றில் பேசும் போது ‘இந்து ஆர்ய சமாஜ்’ மக்கள் இந்தியாவின் அகதிகள் என்று கூறியதாகவும் இதனை கேட்ட அவ்விழாவின் தலைமை விருந்தினர் வித்யானந்த் விதே நேருவை அறைந்ததாகவும் புகைப்படம் ஒன்று வலதுசாரிகள் மற்றும் மோடி ஆதரவாளர்களால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.


உண்மை என்ன?


பரவக் கூடிய புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடியதில், ‘AP Image’ (Associated Press) தளத்தில் இதே புகைப்படம் இருப்பதை காண முடிந்தது. ‘Nehru almost falls’ என்ற தலைப்பில் பதிவிடப்பட்டிருந்த அந்த புகைப்படம் 1962-ம் ஆண்டு எடுக்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



மேற்கொண்டு இது குறித்து தேடியதில், 1962, ஜனவரி 8-ம் தேதி ‘The Florence Times’ என்ற நாளிதழிலும் இந்த புகைப்படம் குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளதை அறிய முடிந்தது.


பாட்னாவில் 1962-ல் நடந்த காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் அமளி ஏற்பட்டுள்ளது. அப்போது பிரதமர் நேரு அதனை கட்டுப்படுத்த முயற்சித்துள்ளார். அத்தகைய முயற்சியின் போது கூட்டத்தில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க ஏதுவாக பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அவரை பிடித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்டதுதான் இந்த புகைப்படம்.



வித்யானந்த் விதே என்பவர் Ved-Sansthan என்ற அமைப்பை நிறுவியுள்ளார். இவர் நேருவை அறைந்ததாக எந்த செய்தியும் இல்லை.


இவற்றில் இருந்து முன்னாள் பிரதமர் நேருவை வித்யானந்த் விதே அறந்ததாகப் பரவும் புகைப்படம் குறித்த தகவல் உண்மையல்ல என்பதை அறிய முடிகிறது.


முடிவு:


இந்தியாவின் முன்னாள் பிரதமர் நேரு இந்து ஆர்ய சமாஜ் மக்கள் இந்தியாவின் அகதிகள் என்று கூறியதற்காக வித்யானந்த் விதே என்பவர் நேருவை அறைந்ததாகப் பரவும் புகைப்படம் குறித்த தகவல் உண்மையல்ல. இப்புகைப்படம் 1962 காங்கிரஸ் கூட்டத்தில் ஏற்பட்ட அமலியின் போது பாதுகாப்பு அதிகாரி ஒருவர் நேருவை பிடித்தபோது எடுக்கப்பட்டது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க