YouTurn

முதல்மரியாதை படத்தில் நான் தான் எழுத்தாளர் என்று சீமான் கூறினாரா? உண்மை என்ன?

முதல்மரியாதை படத்தில் நான் தான் எழுத்தாளர் என்று சீமான் கூறினாரா? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

அவர் “எங்க அப்பா என்ன பாடு படுவார் பசும்பொன்னில், முதல் மரியாதை எப்படி என்று தெரியவில்லை, பசும்பொன்னில் நான் தான் எழுத்தாளர்” என்ற அர்த்தத்திலேயே பேசியிருப்பார். இதனை, முதல்மரியாதை படத்தில் நான் தான் எழுத்தாளர் என்று சீமான் கூறியதாகக் கூறி பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

நான் எழுதியதால் தான் முதல் மரியாதை படம் வெற்றி பெற்றது. நான்தான் அந்த படத்தின் எழுத்தாளர். முதல் மரியாதை 1985 ஆம் ஆண்டு வெளிவந்தது. இயக்குநர் பாரதிராஜா. திரை கதை பாரதிராஜா!! உதவி இயக்குநர்கள் யாரும் இல்ல. அந்த படத்தின் கதை , வசனம், எழுத்தாளர் செல்வராஜ். 


X Link | Archive Link

விரிவான விளக்கம்

இசை வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முதல்மரியாதை படத்திற்கு “நான் தான் எழுத்தாளர்” என்று கூறியுள்ளதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 



உண்மை என்ன? 


பரவி வரும் வீடியோ குறித்து ஆய்வு செய்த போது, “Tamil Star” பக்கத்தில் இதன் முழு வீடியோ கிடைத்தது. பரமசிவன் ஃபாத்திமா என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ள சீமான், ““எங்க அப்பா என்ன பாடு படுவார் பசும்பொன்னில், முதல் மரியாதை எப்படி என்று தெரியவில்லை, நான் தான் அதற்கு எழுத்தாளர்“ என்று கூறியுள்ளார். 



இதில் அவர் “எங்க அப்பா என்ன பாடு படுவார் பசும்பொன்னில், முதல் மரியாதை எப்படி என்று தெரியவில்லை, பசும்பொன்னில் நான் தான் எழுத்தாளர்” என்ற அர்த்தத்திலேயே பேசியிருப்பார். இதனை, முதல்மரியாதை படத்தில் நான் தான் எழுத்தாளர் என்று சீமான் கூறியதாகக் கூறி பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர். 


மேலும் பசும்பொன் திரைப்படத்தில் சீமான் தான் எழுத்தாளரா என்பது குறித்தும் ஆய்வு செய்தோம். திரைப்படத்தில், சரியாக 4:04 நிமிடத்தில், கதை வசனம் சீமான் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. 



இதன் மூலம், சீமான் கூறியது போல பசும்பொன் திரைப்படத்தில் அவர் தான் எழுயத்தாளர் என்பது உறுதியாகிறது. 


முடிவு: 


நம் தேடலில், முதல்மரியாதை படத்தில் நான் தான் எழுத்தாளர் என்று சீமான் கூறியதாகப் பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…

பொய்

டெல்லி மாணவர்கள் போராட்டத்தை ஆதரிப்பாக ‘வங்கதேச ஜமாஅத்-இ-இஸ்லாமி’ கட்சி அறிக்கை வெளியிட்டதா?

‘வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி’ பெயரில் பரப்பப்படும் இந்த அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டது என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.

பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…