YouTurn

சௌதி அரேபியாவில் தீபாவளி கொண்டாடப்பட்டதா?

சௌதி அரேபியாவில் தீபாவளி கொண்டாடப்பட்டதா?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இது சௌதி அரேபியா நாட்டின் தேசிய தினக் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ.

பரவிய செய்தி

சவூதி அரேபியாவில் தீபாவளிக் கொண்டாட்டம்.



X Link

விரிவான விளக்கம்

கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை இந்தியாவில் பரவலாக கொண்டாடப்பட்டது. இதற்கிடையில் தோப் (Thobe) அணிந்த ஆண்களும், ஹிஜாப் அணிந்த பெண்களும் நின்று வானுயர்ந்த கட்டிடங்களுக்கு மேல் வெடிக்கும் பாட்டாசுகளை கண்டுகளிக்கும் 47 நொடிகள் நீளமுள்ள சிறிய வீடியோவை பதிவிட்டு, சவூதி அரேபியாவில் தீபாவளி கொண்டாடப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது. 


https://x.com/i/web/status/1852371532846150022


உண்மை என்ன?


பரப்பப்படும் வீடியோவின் Keyframe-களைக் கொண்டு தேடுகையில், ”94வது சவுதி தேசிய தின வாழ்த்துக்கள் என்று தலைப்பிட்டு இதே வீடியோ யூட்யூப் தளத்தில் காணமுடிந்தது. அதே வீடியோ வேறொரு யூட்யூப் பக்கத்தில் ”ரியாத் நகரம்... சவுதி அரேபியா…” என்று தலைப்பிட்டு பதிவிடப்பட்டிருந்தது. இந்த இரண்டுமே கடந்த செப்டம்பர் மாதம் பதிவிடப்பட்டிருப்பதை கணக்கில்கொண்டு பார்க்கையில், இது தீபாவளி பண்டிகைக்கு முன்பே எடுக்கப்பட்டது என்பது உறுதியாகிறது. 



அரேபிய தீபகற்பத்தில் (Peninsula) உள்ள வெவ்வேறு பிராந்தியங்களை இணைத்து, ஒருங்கிணைந்த சௌதி அரேபிய தேசத்தை மன்னர் ‘அப்துல் அஜீஸ் அல் சவுத்’ 1932ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி உருவாக்கிய வரலாற்று நிகழ்வை கொண்டாடும் வகையில் சவுதி தேசிய தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பட்டாசுகள், இசை நிகழ்ச்சிகள், விமான சாகச நிகழ்ச்சிகள் ஆகியவை இடம்பெறும் வகையில் செப்டம்பர் 23ஆம் தேதி சவுதி தேசிய தினம் கொண்டாடப்படுகிறது.


மேலும், 'இன்ஸ்டாகிராம் பக்கத்தில்’ ஒருவர் இதே வீடியோவை கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி பதிவிட்டுள்ளதை காணமுடிந்தது. செப்டம்பர் 23ஆம் தேதிக்கு முன்பாகவே வீடியோ பதிவிடப்பட்டிருப்பதைக் கொண்டு பார்க்கையில், இந்த வீடியோ குறைந்தபட்சம் சென்ற ஆண்டு (2023) கொண்டாடத்தின்போது எடுக்கப்பட்டிருக்கலாம் என்பதை புரிந்துகொள்ளலாம்.



மேற்கூறிய விவரங்களில் இருந்து, இது சௌதி அரேபியாவின் ரியாத் நகரத்தில் தேசிய தினக் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பது உறுதியாகிறது. இந்த வீடியோவைக் கொண்டு, சௌதி அரேபியாவில் தீபாவளி கொண்டாடப்பட்டதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது.


முடிவு:


சௌதி அரேபியாவில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டதாக பரப்பப்படும் தகவல் தவறானது. இது முந்தைய ஆண்டொன்றில்  சௌதி அரேபியா நாட்டின் தேசிய தினக் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட பழைய வீடியோவாகும்.


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க