
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

Twitter Link | Archive Link
விரிவான விளக்கம்
மேலும் பரவி வரும் வீடியோவில் "இந்திய முஸ்லிம்களே, அரபு விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்துங்கள். மதம் மாறிய முஸ்லீம்கள் நீங்கள். நீங்கள் எங்களுக்கு நற்சான்றிதழ்கள் தரத்தேவையில்லை. காசா மக்கள் மீது உங்களுக்கு அவ்வளவு அக்கறை இருந்தால், நீங்கள் வந்து காசா மக்களை காப்பாற்றுங்கள்" என்று கத்தார் அரசர் கூறியதாக அந்த வீடியோ மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருந்ததையும் காண முடிந்தது.
அரபு நாடுகள் காஸாவுக்கு எதுவும் செய்யவில்லை என்று கூவும் இந்திய பாய்மாருக்கு கத்தார் இளவரசர்,இந்திய முஸ்லிம்களே, அரபு விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்துங்கள். மதம் மாறிய முஸ்லீம்கள் நீங்கள். நீங்கள் எங்களுக்கு நற்சான்றிதழ்கள் தரத்தேவையில்லை. pic.twitter.com/86cef0J3ab
— நரசிம்மன்🇮🇳🕉️🚩💯 follow back. (@Narasim18037507) October 15, 2023
Archive Link:
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், 43 வினாடிகள் கொண்ட இதன் முழு வீடியோ கடந்த 2017 மே 14 அன்று “அல்ஜசீரா முபாஷர்” என்ற யூடியூப் பக்கத்தில் "கத்தார் அமைச்சரகம்: பாலஸ்தீனப் பிரச்சினை என்பது அவர்களின் நிலத்திலிருந்து பிடுங்கப்பட்டு, தாயகத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினையாகும்." என்ற தலைப்புடன் பதிவு செய்யப்பட்டிருந்தது.
மேலும் அந்த வீடியோவின் விளக்கத்தில், "வளர்ச்சி, நிலைத்தன்மை மற்றும் அகதிகள் பிரச்சினைகள்" என்ற தலைப்பின் கீழ் கத்தார் தலைநகரில் நடைபெற்ற 17-வது தோஹா மன்றத்தின் போது கத்தார் அரசரான 'ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியின்' உரை இது" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் இந்த வீடியோ 2017-இல் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பது உறுதியானது.
மேலும் இந்த வீடியோவை அரபு மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்து பார்த்ததில் "காசா மீதான குண்டுவெடிப்பு நிறுத்தப்படாவிட்டால், உலகிற்கு எரிவாயு விநியோகத்தை நிறுத்துவோம் "எனப் பேசவில்லை என்பதையும், தற்போதைய சூழ்நிலையில் குழப்பத்தை உருவாக்கும் வண்ணம் இது தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதையும் அறிய முடிந்தது.
மேலும் தேடியதில், கத்தார் ஊடகமான 'தோஹா நியூஸ்' பரவி வரும் வைரல் வீடியோ 'பொய்யான கூற்றுகளுடன் பரப்பப்படுகிறது' என்று குறிப்பிட்டு கடந்த அக்டோபர் 12 அன்று செய்தி வெளியிட்டுள்ளதையும் காண முடிந்தது. இதன் மூலம் இந்த செய்திகள் பொய்யானவை என்று கத்தார் ஊடகமும் உறுதி செய்துள்ளது.

மேலும் அதில், "இந்த தவறான தகவல் முதன்முதலில் "@qattar_affairs" என்ற ட்விட்டர் கணக்கில் தான் வெளியிடப்பட்டது, ஆனால் தற்போது இந்த பக்கம் முடக்கப்பட்டுள்ளது." என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: காசா மக்களுக்குத் தண்ணீர், உணவு கொண்டு செல்லும் எகிப்தியர்கள் எனப் பழைய வீடியோவை பதிவிட்ட மாலை மலர் !
மேலும் படிக்க: இஸ்ரேலிய கல்லூரி பெண், இந்திய ஜேஎன்யு கல்லூரி ஆணின் புகைப்படம் என இந்து மக்கள் கட்சி பரப்பும் பொய் !
முடிவு:
நம் தேடலில், காசா மீதான குண்டுவெடிப்பு நிறுத்தப்படாவிட்டால், உலகிற்கு எரிவாயு விநியோகத்தை நிறுத்துவோம் என பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கத்தார் குரல் கொடுத்ததாகவும், இந்திய முஸ்லீம்களை கத்தார் அரசர் விமர்சித்ததாகவும் பரவும் வீடியோ 2017-இல் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதையும், இந்த வீடியோ தொடர்பாக பரவும் தகவல்கள் தவறானவை என்பதையும் அறிய முடிகிறது.