YouTurn

இஸ்லாமியப் பெண்களுக்கு விவாகரத்து உரிமையை மோடி ஆட்சிதான் கொடுத்ததா? உண்மை என்ன?

இஸ்லாமியப் பெண்களுக்கு விவாகரத்து உரிமையை மோடி ஆட்சிதான் கொடுத்ததா? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இஸ்லாமிய சட்டத்தின் படியும் நீதிமன்றத்தின் வாயிலாகவும் இஸ்லாமியப் பெண்கள் விவாகரத்து பெறும் உரிமை நீண்டகாலமாக நடைமுறையில் உள்ளது.

பரவிய செய்தி

முத்தாலாக் தடை சட்டம் வரும் முன்பு கணவர் தான் மனைவியை "தலாக் தலாக் தலாக்" என சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறை அதிகம்  இருந்தது. இஸ்லாமிய பெண்களுக்கும் விவாகரத்து செய்யலாம் என்ற இந்த சம உரிமையை தந்தது தான் மோடியின் சமத்துவ ஆட்சி


Sanghi Prince bjp khula

X link

விரிவான விளக்கம்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானு தங்களது திருமண உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்தனர். 


https://x.com/i/web/status/1859097509634674732


இதனைத் தொடர்ந்து பாஜகவைச் சேர்ந்த ‘சங்கி பிரின்ஸ்’ என்ற எக்ஸ் பக்கத்தில்  ‘இஸ்லாமிய பெண்களுக்கும் விவாகரத்து செய்யலாம் என்ற இந்த சம உரிமையை தந்தது தான் மோடியின் சமத்துவ ஆட்சி’ எனப் பதிவிட்டுள்ளார்.  


உண்மை என்ன?


இஸ்லாம் மத சட்டத்தின்படி கணவன் தன் மனைவியை விவாகரத்து செய்ய ’தலாக்’ என்னும் முறை பின்பற்றப்பட்டு வந்தது. குறிப்பிட்ட கால இடைவெளியில் மூன்று முறை கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத பட்சத்தில் இருவரும் நிரந்தரமாகப் பிரிந்துவிடுவர். இத்தகைய முத்தலாக் முறை இந்தியாவில் தடை செய்யப்பட்டுவிட்டது.

image.png

இதேபோல் மனைவி தன் கணவனை விவாகரத்து செய்ய இஸ்லாத்தில் ‘குலா’ என்ற முறை பின்பற்றப்படுகிறது. இந்த முறை பல நூறு ஆண்டுகளாக இஸ்லாம் சட்டத்தில் உள்ள ஒரு நடைமுறையாகும். விவாகரத்து செய்யும் போது திருமணத்திற்காகக் கணவனிடம் இருந்து மனைவி பெற்ற மகரை திருப்பி அளிக்க வேண்டும். விவாகரத்தைப் போலவே மறுமண உரிமையும் இஸ்லாம் சட்டத்தில் பெண்களுக்கு உள்ளது.



இதனைத் தவிர்த்து ‘THE DISSOLUTION OF MUSLIM MARRIAGES ACT-1939’ மூலம் நீதிமன்ற வாயிலாகவும் இஸ்லாமியப் பெண்கள் விவாகரத்து பெரும் உரிமை பல ஆண்டுகளாக உள்ளது.



இவற்றில் இருந்து இஸ்லாம் முறைப்படியும் நீதிமன்றம் வாயிலாகவும் இஸ்லாமியப் பெண்களுக்குப் பல ஆண்டுகளாக விவாகரத்து உரிமை வழங்கப்பட்டு வருவதை அறிய முடிகிறது. ஆனால், மோடி ஆட்சியில் தான் இந்த உரிமை வழங்கப்பட்டதாகப் பொய் செய்தி பரப்பப்படுகிறது.  


முடிவு:


இஸ்லாமியப் பெண்களுக்கும் விவாகரத்து செய்யும் உரிமையை மோடி பெற்றுத்தந்ததாகப் பரவும் தகவல் தவறானது. இஸ்லாமிய சட்டத்தின் படியும் நீதிமன்றத்தின் வாயிலாகவும் இஸ்லாமியப் பெண்கள் விவாகரத்து பெறும் உரிமை நீண்டகாலமாக நடைமுறையில் உள்ளது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.