YouTurn

நீண்ட கழுத்துடைய அரியவகை மனிதர்கள் ஆப்பிரிக்காவில் வாழ்ந்தனரா?

நீண்ட கழுத்துடைய அரியவகை மனிதர்கள் ஆப்பிரிக்காவில் வாழ்ந்தனரா?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்த புகைப்படங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கபட்டவை.

பரவிய செய்தி

ஆப்பிரிக்காவில் வாழ்ந்த நீளகழுத்து மனிதர்கள்.... இவர்கள் அரியவகை இனம்... மிகவும் நல்லவர்கள். 

Link

விரிவான விளக்கம்

மிக நீண்ட கழுத்துடைய மனிதர்களின் புகைப்படங்களையும், நீண்ட கழுத்துடைய புதைபடிமத்தின் புகைப்படத்தையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட சிறு வீடியோவை யூட்யூப் தளத்தில் பதிவிட்டு, இத்தகைய மனிதர்கள் ஆப்பிரிக்காவில் வாழ்ந்ததாக தகவல் பரப்பப்படுகிறது.



உண்மை என்ன?


பரப்பப்படும் தகவலின் உண்மைத்தன்மையை அறிய, ’people with long neck’ என்று இணையத்தில் தேடினோம். ஆனால், மியான்மர், தாய்லாந்து போன்ற நாடுகளில் உள்ள ’கயான்’ பழங்குடியினத்தைச் சேர்ந்த ’படாங் பெண்களைப்’ பற்றிய தகவல்களும் புகைப்படங்களும் மட்டுமே கிடைத்தது.

பின்னர், இந்த புகைப்படங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கபட்டவையா? என்பதை அறிந்துகொள்ள ’True Media’ என்ற தளத்தில் சோதனை செய்தோம். அதன்மூலம், இந்த புகைப்படங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதுதான் என்பது உருதியானது. புகைப்படம் 1, புகைப்படம் 2, புகைப்படம் 3


மியான்மரில் உள்ள படாங் (Padaung) பெண்களின் கழுத்து எப்படி நீளமாக உள்ளது என்பது பற்றி தேடுகையில், உலக சாதனைகளை பட்டியலிடும் ‘கின்னஸ் (Guinness)’ தளத்தில் இதுபற்றிய குறிப்பை காண முடிந்தது. படாங் பெண்கள் தங்களது கழுத்தை சுற்றி கனமான பித்தளை வளையங்களை அணிந்திருக்கிறார்கள். இந்த பெண்கள் 5 முதல் 9 வயதில் இருக்கும்போது முதன்முதலாக இந்த வளையங்களை அணியத் துவங்குகிறார்கள். அவர்களின் வயது முதிர முதிர கூடுதலாக வளையங்களை அணிகிறார்கள். இதனால், படாங் பெண்கள் 45 வயதாகும் போது 15 கிலோ எடையுள்ள கிட்டதட்ட 32 வளையங்கள் அணிந்திருக்கிறார்கள். 



இந்த கனமான வளையங்கள் காரணமாக, கழுத்தெலும்பும் விலா எலும்பும் வளைகிறது. இதனால் கழுந்து நீண்டிருப்பது போன்ற தோன்றம் ஏற்படுகிறது. 


மேற்கூறிய விவரங்களில் இருந்து, இந்த புகைப்படங்கள்  செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கபட்டவை என்பதும், ஆப்பிரிக்காவில்  நீளமான கழுத்துடைய மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்ற தகவல் பொய்யானது என்பதும் உறுதியாகிறது.


முடிவு: 


ஆப்பிரிக்காவில் நீளகழுத்துடைய  மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்று பரப்பப்படும் தகவல் பொய்யானது. இந்த புகைப்படங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கபட்டவையாகும்.


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.