YouTurn

'குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய வேண்டும்' என ஆளுநர் ரவி கூறியதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு!

'குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய வேண்டும்' என ஆளுநர் ரவி கூறியதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய வேண்டும்! தமிழர்களைச் சாராயம் குடிப்பவர்களாக மாற்றுவதே குலதெய்வங்கள் தான்; சாராயச் சாவுகளுக்கு அடிப்படைக் காரணமான குலதெய்வ, நாட்டார் தெய்வ, கிராமக் கோவில் திருவிழாக்களைத் தடை செய்ய வேண்டும்! - ஆளுநர் ரவி



X Link | Archive Link

விரிவான விளக்கம்

தமிழர்களைச் சாராயம் குடிப்பவர்களாக மாற்றுவதே குலதெய்வங்கள் தான். சாராயச் சாவுகளுக்கு அடிப்படைக் காரணமான குலதெய்வ, நாட்டார் தெய்வ, கிராமக் கோவில் திருவிழாக்களைத் தடை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூரியதாகக் கூறி 'பாலிமர் நியூஸ்' ஊடகத்தின் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 

இதனை திமுகவினர் பலரும் விமர்சித்து, தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் வைரலாகப் பரப்பி வருவதையும் காண முடிகிறது.





உண்மை என்ன?

பரவி வரும் செய்திகள் குறித்து அறிய, தமிழ்நாடு ஆளுநரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கமான RAJ BHAVAN, TAMIL NADU என்ற பக்கத்தில் ஆய்வுசெய்து பார்த்தோம். அதில் இறுதியாக "குற்றவியல் நீதி அமைப்பில் இந்தியாவின் முற்போக்கான பாதை" என்ற தலைப்பிலான மாநாட்டில் ஆளுநர் ரவி பேசியிருப்பதைக் காணமுடிந்தது.

எனவே இதுகுறித்து ஆளுநர் ரவி பேசியுள்ள வீடியோவை நேற்று (ஜூன் 24) "நியூஸ்18 தமிழ்நாடு" ஊடகம், தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. வீடியோவை ஆய்வுசெய்து பார்த்ததில், ஆளுநர் எந்த இடத்திலும் குலதெய்வ வழிபாட்டை தடை செய்யவேண்டும் என்றோ, குலதெய்வ வழிபாடு குறித்தோ பேசவில்லை.



மேலும் அவருடைய மற்ற பதிவுகள் மற்றும் வீடியோக்களையும் ஆய்வுசெய்ததில், இதுகுறித்து அவர் எதுவும் கூறவில்லை என்பதை உறுதிசெய்ய முடிந்தது. எனவே இதுகுறித்து "பாலிமர் நியூஸ்" ஏதாவது செய்தி வெளியிட்டிருக்கிறதா என்பது குறித்து அறிய அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடியதில், இது போலி செய்தி (Fake Alert) என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது



இதன்மூலம் "குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய வேண்டும்" என்று ஆளுநர் ரவி கூறியதாக "பாலிமர் நியூஸ்" வெளியிடும் நியூஸ் கார்டு வடிவில் சிலர் எடிட் செய்து சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பது தெளிவாகிறது.

மேலும் படிக்க: தேர்தலில் வெற்றிப் பெறாத அண்ணாமலை அறிவுரை கூற வேண்டாம் என ஆளுநர் ரவி பேசியதாகப் பரவும் போலிச் செய்தி !

மேலும் படிக்க: “ஆளுநர் ஆர்.என்.ரவியின் பொய்கள்” வீடியோவின் ஆதாரத் தொகுப்பு !

முடிவு:

நம் தேடலில், "குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய வேண்டும்" என்று ஆளுநர் ரவி கூறியதாக பரவி வரும் "பாலிமர் நியூஸ்" ஊடகத்தின் நியூஸ் கார்டு போலியானது என்பதை அறியமுடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க