YouTurn

சீமான் குறித்து நடிகர் சாய் தீனா புகழ்ந்து பேசினாரா? உண்மை என்ன?

சீமான் குறித்து நடிகர் சாய் தீனா புகழ்ந்து பேசினாரா? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

திரைப்பட நடிகர் சாய் தீனா, நடிகர் விஜய் குறித்து கடந்த 2019-ல் பேசிய வீடியோவை, சீமான் குறித்து நடிகர் சாய் தீனா புகழ்ந்து பேசுவதாகக் கூறி பலரும் தவறாகத் திரித்துப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

எங்க அண்ணன் எங்க உயிரு..!


X Link | Archive Link

விரிவான விளக்கம்

திரைப்பட நடிகர் சாய் தீனா, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து புகழ்ந்து பேசுவதைப் பாருங்கள் என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. வீடியோவில்  நடிகர் சாய் தீனா எங்கள் அண்ணனைப் பற்றி கூறுவதற்கு ஒரு நாள் போதாது என்பது போல புகழ்ந்து பேசுவதைக் காண முடிகிறது. அவர் பேசி முடித்ததும் வீடியோவில் சீமானின் வீடியோக்கள் வரிசையாக வருவதையும் காண முடிகிறது. 



உண்மை என்ன? 


பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில் இது கடந்த 2019 ஆம் ஆண்டு பதிவுசெய்யப்பட்ட வீடியோ என்பதை அறிய முடிந்தது. 


Little Talks‘ யூடியூப் பக்கத்தில் “THALAPATHY-லாம் கலைத்தாயின் தவம் - Sai Dheena Emotional Interview | Bigil | Vijay | LittleTalks” என்ற தலைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள வீடியோவில், நடிகர் சாய் தீனா, அண்ணன் என்று குறிப்பிட்டு நடிகர் விஜய்யை பற்றியே புகழ்ந்து பேசுகிறார். 



இந்நிலையில் 'பிகில்' திரைப்படம் வெளியான போது நடிகர் சாய் தீனா நடிகர் விஜய் குறித்து புகழ்ந்து பேசியதை, சீமான் குறித்து புகழ்ந்து பேசுவதாகக் குறிப்பிட்டு பலரும் வீடியோவின் ஒரு சிறு பகுதியை மட்டும் எடுத்து எடிட் செய்து தவறாகப் பரப்பி வருகின்றனர். 


முடிவு: 


நடிகர் சாய் தீனா, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து புகழ்ந்து பேசுவதாகப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க