
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பிரேசில் நாட்டின் அமேசான் காடுகளில் உருவான காட்டுத் தீயானது தொடர்ந்து பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது. இயற்கையான மழைக்காட்டின் பகுதிகள் தீக்கு இரையாகி கொண்டிருப்பதற்கு எதிராக பலரும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அவ்வாறு குரல் கொடுத்தவர்களில் ஹாலிவுட் நடிகர் டிக்காப்ரியோவும் ஒருவர்...
பரவிய செய்தி

விரிவான விளக்கம்

உலகில் நிகழும் சுற்றுச்சூழல் சார்ந்த பாதிப்பிற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சுற்றுச்சூழல் ஆர்வலரும், ஹாலிவுட் நடிகருமான டிக்காப்ரியோ, தீயினால் அமேசான் காடுகள் பாதிக்கப்படுவதற்கும் குரல் எழுப்பி இருந்தார்.
இந்நிலையில், அமேசான் காட்டில் உருவாகி உள்ள தீயினை அணைக்க அமெரிக்க மதிப்பில் 5 மில்லியன் டாலரை டிக்காப்ரியோ நன்கொடையாக அளித்து இருப்பதாக முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதனுடன் பழங்குயினர் டிக்காப்ரியோவிற்கு நன்றி கூறும் பதாகைகளை ஏந்தி இருக்கும் புகைப்படமும் இணைக்கப்பட்டு உள்ளது.
சுற்றுச்சூழல் அமைப்பு :
View this post on Instagram
A post shared by Leonardo DiCaprio (@leonardodicaprio) on Aug 25, 2019 at 6:51am PDT
Earth Alliance என்ற சுற்றுச்சூழல் அமைப்பை லியோனார்டோ டிக்காப்ரியோ, லாரன்ஸ் போவெல் ஜாப்ஸ், பிரையன் சேத் ஆகியோர் உருவாக்கி உள்ளனர். அதன் மூலம் 5 மில்லியன் டாலர்கள் அளவிற்கான தொகையை அமேசான் காட்டிற்கு நிதியாக அளிப்பதாகவும், எரிந்து கொண்டு இருக்கும் பகுதிகளில் சரி செய்யும் வேலைகளை உள்ளூர் பார்ட்னர்கள் மூலம் இணைந்து செயல்படுத்த உள்ளதாகவும், தங்களுடன் இணைந்து கொள்ளுமாறு டிக்காப்ரியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
மேலும், உதவ நினைப்பவர்கள் நிதியுதவி அளிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். அந்த நிதியானது 100 சதவீதம் அமேசான் பகுதியை பாதுகாக்க களத்தில் இறங்கி வேலை செய்பவர்களுக்கு அளிக்கப்படும். உலகின் இயற்கையை பாதுகாக்க Earth Alliance உதவ தீர்மானித்துள்ளது. தற்பொழுது அமேசானில் நிகழ்ந்து கொண்டிருக்கும் பிரச்சனையின் மீது அதீத கவனம் செலுத்த உள்ளதாக டிக்காப்ரியோ பதிவு கூறுகிறது.
அமேசான் காடுகளின் பாதிப்பை சரி செய்ய டிக்காப்ரியோ 5 மில்லியன் டாலர்களை அளிப்பதாக பிபிசி செய்தியிலும் வெளியாகி இருக்கிறது.
நன்றி சொல்லும் புகைப்படம் :
ஈக்வேடோரின் அமேசான் மழைக்காடு பகுதிகளில் பல தலைமுறையாக வசித்து வரும் பழங்குடி மக்கள் பகுதியில் ஆயில் நிறுவனங்களுக்காக நிலத்தை கையகப்படுத்த அரசு முயற்சித்து வருகிறது. இயற்கையுடன் இணைந்து இருக்க கோரிக்கையில் கையெழுத்திடுங்கள் மற்றும் அமேசானை பாதுகாப்போம் என ஜூன் 28-ம் தேதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிக்காப்ரியோ பதிவிட்டு இருந்தார்.
View this post on Instagram
A post shared by Leonardo DiCaprio (@leonardodicaprio) on Jun 28, 2019 at 7:20am PDT
டிக்காப்ரியோ உடைய பதிவால் பழங்குடி மக்களின் பிரச்சனை பெரிய அளவில் தெரிய ஆரம்பித்தது. சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களில் தொடர்ந்து தனது பங்களிப்பை அளித்து வரும் டிக்காப்ரியோவிற்கு நன்றி கூறும் வகையில் Waorani பழங்குடி மக்கள் பதாகைகளை ஏந்தி இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டனர்.
View this post on Instagram
A post shared by Leonardo DiCaprio (@leonardodicaprio) on Jul 7, 2019 at 5:04pm PDT
ஜூலை 7-ம் தேதி அந்த புகைப்படத்தை டிக்காப்ரியோ தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படமும் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பாக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் டிக்காப்ரியோ இதற்கு முன்பாக சென்னை தண்ணீர் பிரச்சனை குறித்தும் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.