YouTurn

தோனி ரன் அவுட் ஆகியதற்கு புகைப்பட கலைஞர் கண்ணீர் விடுகிறாரா ?

தோனி ரன் அவுட் ஆகியதற்கு புகைப்பட கலைஞர் கண்ணீர் விடுகிறாரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் தோல்வியை சந்தித்தது. அப்போட்டியில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி ரன் அவுட் ஆகி வெளியேறும் பொழுது அங்கிருந்த புகைப்படக் கலைஞர் கண்ணீர் விடுவதாக சில புகைப்படங்களின் தொகுப்புகள் இந்திய அளவில்...

பரவிய செய்தி

சொல்ல வார்த்தைகள் இல்லை.. பேசும் படும்..

விரிவான விளக்கம்

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் தோல்வியை சந்தித்தது. அப்போட்டியில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி ரன் அவுட் ஆகி வெளியேறும் பொழுது அங்கிருந்த புகைப்படக் கலைஞர் கண்ணீர் விடுவதாக சில புகைப்படங்களின் தொகுப்புகள் இந்திய அளவில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன.



தற்சமயம் அதே பதிவுகள் தமிழில் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமுக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்திய அளவில் வைரலாகிய புகைப்படங்கள் குறித்து தேடுகையில், 2019 ஜனவரி 24-ம் தேதி Asiancup உடைய அதிகாரப்பூர்வ ட்விட்டரில் பக்கத்தில் இப்படமானது இடம்பெற்று இருக்கிறது.


" 2019 ஜனவரியில் நடைபெற்ற asiancup கால்பந்து போட்டியில் கத்தார் மற்றும் ஈராக் இடையேயான போட்டியில் கத்தார் அணி 1-0 என்ற கணக்கில் ஈராக் அணியை வென்றது. இதனைக் கண்டு புகைப்பட கலைஞர் கண்ணீர் விட்டு அழுது உள்ளார் "


ஈராக் விளையாட்டு போட்டிகளின் புகைப்படக் கலைஞர் முகமத் அல் அசாமி கண்ணீருடன் தன் பணியை முடித்தார் என ஸ்டீவன் நபில் என்பவர் ஜனவரி 24, 2019-ல் தன் ட்விட்டர் பக்கத்தில் முகமத் அல் அசாமி உடைய புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.



முகமத் அல் அசாமி உடைய பிற புகைப்படங்களில் அவரின் சட்டையில் ஈராக் நாட்டின் கொடி இருப்பதையும் காண முடிகிறது. இப்படங்களை ஸ்டீபன் நபில் பதிவிட்டு இருக்கிறார்.

முடிவு :

ஆசிய கால்பந்து போட்டியில் கத்தார் அணியுடன் ஈராக் தோல்வி அடைந்த பொழுது ஈராக் நாட்டின் புகைப்படக் கலைஞர் கண்ணீர் விடும் புகைப்படங்களை உலகக்கோப்பை போட்டியில் தோனி அவுட் ஆகிய பொழுது நிகழ்ந்ததாக தவறாக பரப்பி வருகின்றனர்.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…

பொய்

டெல்லி மாணவர்கள் போராட்டத்தை ஆதரிப்பாக ‘வங்கதேச ஜமாஅத்-இ-இஸ்லாமி’ கட்சி அறிக்கை வெளியிட்டதா?

‘வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி’ பெயரில் பரப்பப்படும் இந்த அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டது என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.

பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…