
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

Facebook link | Archive link
விரிவான விளக்கம்
M.S Dhoni Financial Assistance
Chennai team captain #MSD donated this year’s IPl proceeds to buy the full oxygen 🙏👍@ChennaiIPL #CSK #WhistlePodu pic.twitter.com/eO273LPMdJ
— Dr.KaviThanJali MBBS (@Itz_TheriBaby) May 5, 2021
உண்மையில், தோனி 15 கோடி நிதியுதவி அளித்ததாக எந்த செய்தியும் வெளியாகவில்லை. வைரல் செய்யப்படும் புதிய தலைமுறை செய்தியின் டெம்பிளேட் எடிட் செய்யப்பட்டதே, எடிட் செய்ததில் எழுத்துப் பிழைகள் இருப்பதை காணலாம்.

2020 மார்ச் 28-ம் தேதி வெளியான எகனாமிக் டைம்ஸ் செய்தியில், " எம்.எஸ் தோனி கொரோனா நிதியாக 1 லட்சம் ரூபாய் வழங்கியதாக " வெளியாகி இருக்கிறது. புனேவைச் சேர்ந்த அறக்கட்டளையான முகுல் மாதவ் பவுண்டேசனுக்கு அந்த நிதியை வழங்கி இருக்கிறார். இதன் பிறகு, தோனி வழங்கியது சிறிய தொகை என ட்விட்டர் உள்ளிட்டவையில் நெட்டிசன்கள் பதிவிடத் துவங்கி வைரலாகியது.
தோனி ஆக்சிஜன் வாங்குவதற்காக 15 கோடி வழங்கியதாக இந்திய அளவில் சமூக வலைதளங்களில் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அப்படி எந்தவொரு தகவலும் இல்லை.
இதேபோல், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் 21 கோடி நிதியுதவி அளித்து உள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த ஆண்டில் விராட் கோலியும், அனுஷ்காவும் பிஎம் கேர் நிதிக்கு ரூ.3 கோடி வழங்கியதாகவே செய்தியில் வெளியாகி இருக்கிறது.
RCB has identified key areas where much needed help is required immediately in healthcare infrastructure related to Oxygen support in Bangalore and other cities, and will be making a financial contribution towards this. pic.twitter.com/jS5ndZR8dt
— Royal Challengers Bangalore (@RCBTweets) May 2, 2021
ஆர்.சி.பி அணி சார்பில் பெங்களூர் மற்றும் முக்கிய நகரங்களில் ஆக்சிஜன் தொடர்பான தேவைகளுக்கு நிதி உதவி அளிக்க உள்ளதாக விராட் கோலி பேசும் வீடியோ உடன் ஆர்.சி.பி ட்விட்டர் பக்கத்தில் மே 2-ம் தேதி பதிவாகி இருக்கிறது. அதில், எவ்வளவு நிதியுதவி எனக் கூறவில்லை. தற்போது ஐபிஎஸ் போட்டிகளும் நித்தப்பட்டுள்ளன.