யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு மாநில அளவில் மக்கள் எதிர்ப்பை தெரிவித்தும் ஆளும் அரசு திட்டத்தை செயல்படுத்தும் நோக்கத்திலேயே இன்றுவரை இருந்து வருகிறது. இந்நிலையில், சேலம் எட்டு வழிச் சாலைக்கு ஆதரவாக திமுக எம்.பி தயாநிதி மாறன் மக்களவையில் பேசியதாக ஓர் வீடியோ சமூக வலைதளங்களில்...
பரவிய செய்தி
இங்கே 8 வழிச் சாலை வேண்டாம். அங்கே பாராளுமன்றத்தில் வேண்டும்.. திமுகவின் மோசடியான இரட்டை வேடம்.

விரிவான விளக்கம்
சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு மாநில அளவில் மக்கள் எதிர்ப்பை தெரிவித்தும் ஆளும் அரசு திட்டத்தை செயல்படுத்தும் நோக்கத்திலேயே இன்றுவரை இருந்து வருகிறது. இந்நிலையில், சேலம் எட்டு வழிச் சாலைக்கு ஆதரவாக திமுக எம்.பி தயாநிதி மாறன் மக்களவையில் பேசியதாக ஓர் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
நாம் தமிழர் கட்சியின் எடப்பாடி சட்டமன்றத் தொகுதி எனும் முகநூல் பக்கத்தில், மக்களவையில் தயாநிதி மாறன் பேசும் வீடியோ பதிவிடப்பட்டு கண்டனம் தெரிவித்து இருந்தனர். ஆனால், அந்த வீடியோவில் தயாநிதி மாறன் முழுவதும் ஆங்கிலத்திலேயே பேசி இருந்தார். அவர் கூற வருவது என்னவென்றால்,
" 2004 முதல் 2009 வரையில் நெடுஞ்சாலைகளுக்கான பொற்காலம். அப்பொழுது டி.ஆர் பாலு அவர்கள் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். அந்த நேரத்தில் தமிழகத்திற்கு நெடுஞ்சாலைகள் தொடர்பான பல நல்ல திட்டங்கள் வந்தன. அதற்கு பிறகு எந்தவொரு நல்ல திட்டங்களும் வரவில்லை. சென்னை-சேலம் இடையேயான பசுமை வழிச்சாலை திட்டம் கடும் சர்ச்சை இருக்கிறது. சென்னையில் இருந்து வெளியே செல்வதற்கே 2 மணி நேரங்கள் ஆகின்றன. நாங்கள் ஏன் எதிர்க்கிறோம் என்றால், சென்னையில் இருந்து வெளியே செல்ல இருக்கும் பிரச்சனைகளை சரி செய்யாமல், அடுத்த பிரச்சனைகளுக்கு செல்கிறோம். முதலில் அதனை சரி செய்யுங்கள், தமிழ்நாட்டிற்கு கவனம் செலுத்துங்கள். தமிழ்நாடு முழுவதுமாக நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. தயவு செய்து தமிழ்நாட்டிற்கு கவனம் செலுத்துங்கள். போக்குவரத்து பிரச்சனையை சரி செய்யுங்கள் " என தயாநிதி மாறன் பேசியுள்ளார்.
சென்னையில் இருந்து நகரின் வெளி பகுதிக்கு செல்லவே சில மணிநேரங்கள் ஆகின்றன. அதிலும், பண்டிகை காலங்களில் பல நேரங்கள் கூட ஆகின்றன. நகருக்குள் இருக்கும் பிரச்சனையை முதலில் சரி செய்யுமாறு எடுத்துரைத்து இருக்கிறார். அந்த வீடியோவில், எட்டு வழிச் சாலைக்கு ஆதரவு அளிப்பதாக எங்கும் பேசவில்லை.
இதைத்தவிர, சேலம் எட்டு வழிச் சாலைக்கு ஆதரவாக திமுக எம்.பி தயாநிதி மாறன் மக்களவையில் பேசியதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப் பேரவையில் பேசி இருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து உள்ளார் தயாநிதிமாறன்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், " தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று முன்தினம் என்னைப் பற்றிக் குறிப்பிட்டு, சேலம்-சென்னை எட்டு வழிச்சாலையை நான் ஆதரித்து நாடாளுமன்றத்தில் பேசியதாக உண்மைக்கு மாறான முழுக்க முழுக்க ஒரு பொய்ச் செய்தியை, நான் பேசாத ஒரு வார்த்தையை வழக்கம் போல் தன் பாணியிலேயே இட்டுக்கட்டி, அதை திரித்தும், திசை திருப்பும் வகையிலும் பேசியுள்ளார் " எனத் தெரிவித்து இருக்கிறார்.
மேலும், இது தொடர்பாக முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் என கூறி மக்களவையில் அவர் பேசியதையும் இணைத்து இருந்தார்.
முடிவு :
சமூக வலைதளங்களில் பரவியது போன்றும், முதல்வர் கூறியது போன்றும் மக்களவையில் திமுக எம்.பி தயாநிதி மாறன் எட்டு வழிச் சாலையை ஆதரித்து பேசவில்லை என்பதை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் அறிந்து கொள்ள முடிகிறது.