YouTurn

வெள்ள நீரில் மூழ்கிய டெல்லி சாலை என பரவும் தவறான புகைப்படம் !

வெள்ள நீரில் மூழ்கிய டெல்லி சாலை என பரவும் தவறான புகைப்படம் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

டெல்லியை லண்டனாக மாற்றுவேன் - சங்கிவால் கெஜ்ரி. தேம்ஸ் நதியை டெல்லிக்குள் பாய விட்ட சங்கியே! சொன்ன சொல் மாறாத உத்தமன் நீர்தான்யா.



விரிவான விளக்கம்

சாலையில் தேங்கி இருக்கும் தண்ணீரில் நாற்காலிகளை வைத்து அமர்ந்து டீ குடிப்பது போன்றும், குழந்தைகள் விளையாடுவது போன்றும் எடுக்கப்பட்ட மேற்காணும் புகைப்படத்தை வைத்து டெல்லியை லண்டனை போன்று மாற்றுவதாக கூறிய அரவிந்த் கெஜ்ரிவால் தேம்ஸ் நதியை டெல்லிக்குள் திருப்பி விட்டார் என கிண்டல், கேலி உடன் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. தமிழில் ஒத்த செருப்பு எனும் முகநூல் பக்கத்தில் இப்பதிவு வெளியாகி இருக்கிறது.

அதுபோலவே, " டெல்லியை லண்டனைப் போல் மாற்றமுடியுமா எனத் தெரியவில்லை, ஆனால் வெனிஸ் போன்று அவர் மாற்றுவார் " எனும் கிண்டல் பதிவை இந்திய அளவில் பிற மொழிகளில் அரசியல் உள்நோக்கத்துடன் பரப்பி வருகிறார்கள் என்பதையும் அறிய முடிந்தது. இன்னும் சிலர், இப்புகைப்படம் குஜராத் மாநிலத்தில் எடுக்கப்பட்டது என்றும் பகிர்ந்து இருக்கிறார்கள்.

உண்மை என்ன ? 

டெல்லி என வைரல் செய்யப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், " 2016-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி குர்மீத் சிங் மீட் ஹயேர் என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பஞ்சாப் மன்சா மாவட்டத்தில் உள்ள குடும்பம் மந்தமான கழிவுநீர் வெளியேற்றும் பணிகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம் என இப்புகைப்படத்தினை வெளியிட்டு உள்ளார்.



Twitter link | archive link

2016-ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி சுபாஷ் சச்தேவ் என்பவரின் முகநூல் பக்கத்தில் மன்சா நகரில் புதிதாக திறக்கப்பட்ட உணவகம் என குடும்பத்தினர் மழை நீரின் நடுவில் அமர்ந்து டீ அருந்தும் பல புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.



Facebook link | archive link 

அரவிந்த் கெஜ்ரிவால் அரசு ஆளும் டெல்லியில் வெள்ளத்தால் தேங்கிய நீரில் எடுக்கப்பட்ட புகைப்படம் எனக் கூறி இந்திய அளவில் அரசியல் உள்நோக்கத்துடன் கடந்த 4 ஆண்டுகளாக தவறாக பரப்பி வருகிறார்கள். இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் மழை, வெள்ளம் என வந்தால் தேங்கும் தண்ணீரை அப்புறப்படுத்தும் வழிமுறைகளை செய்திருக்க வேண்டியதே முதன்மையானது. ஆனால், அரசியல் சார்ந்த கிண்டல்கள், தவறான கருத்துக்களோ சமூக வலைதளங்களில் குவிந்து கிடக்கின்றன.

முடிவு : 

நம் தேடலில், அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சியில் டெல்லிக்குள் தேம்ஸ் நதியை திருப்பி விட்டதாக கிண்டல் செய்யப்படும் புகைப்படம் 4 ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தது என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க