YouTurn

பிரதமர் மோடி டெல்லியில் உள்ள அக்பர் சாலைக்கு பிபின் ராவத் பெயரை சூட்டினாரா ?

பிரதமர் மோடி டெல்லியில் உள்ள அக்பர் சாலைக்கு பிபின் ராவத் பெயரை சூட்டினாரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

டெல்லியில் உள்ள அக்பர் சாலைக்கு இராணுவ தளபதி பிபின் இராவத் பெயர் சூட்டினார் பிரதமர் மோடி.

விரிவான விளக்கம்

இந்திய முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவத்தினர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இறந்தவர்களின் உடல்களுக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது.



இந்நிலையில், டெல்லியில் உள்ள அக்பர் சாலைக்கு முப்படை தளபதி பிபின் ராவத் பெயரை பிரதமர் மோடி சூட்டி உள்ளதாக ஓர் தகவல் வைரலாகி வருகிறது.

உண்மை என்ன ? 

2021 டிசம்பர் 13-ம் தேதி " டெல்லி அக்பர் சாலைக்கு ஜெனரல் பிபின் ராவத் பெயர்? " எனும் தலைப்பில் தினமலர் செய்தியில், " டெல்லியில் உள்ள அக்பர் சாலைக்கு, சமீபத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பெயரை வைக்க உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆசிஷ் கோபால் கார்க் கோரிக்கை விடுத்துள்ளார் " என்றே வெளியாகி இருக்கிறது.

டெல்லி சாலைக்கு பிபின் ராவத் அவர்களின் பெயரை வைக்க வேண்டும் என்கிற கோரிக்கையே முன்வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி டெல்லி அக்பர் சாலைக்கு பிபின் ராவத் பெயரை சூட்டியதாக எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.

இதேபோல், டெல்லி பாஜகவின் ஊடகப் பிரிவு தலைவர் நவீன் குமார் ஜிண்டால், டெல்லி அக்பர் சாலைக்கு முப்படை தளபதி பிபின் ராவத் பெயரை வைக்க வேண்டும் என டெல்லி மாநகராட்சிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

டெல்லியில் உள்ள அக்பர் சாலையின் பெயரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வைப்பது முதல் முறையல்ல. அக்பர் சாலையை மகாராணா பிரதாப் சாலை என்று பெயர் மாற்றம் செய்யக் கோரி அமைச்சர் விகே சிங் கடிதம் எழுதி இருந்தார். அக்டோபர் மாதம், அக்பர் சாலையின் அறிவிப்பு பலகை சேதப்படுத்தப்பட்டது மற்றும் அவற்றின் மீது " சாம்ராட் ஹேமு விக்ரமாதித்யா மார்க் " என அறிவிக்க வேண்டும் என்கிற போஸ்டர்கள் ஒட்டப்பட்டன என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.
முடிவு : 


நம் தேடலில், பிரதமர் மோடி டெல்லியில் உள்ள அக்பர் சாலைக்கு இராணுவ தளபதி பிபின் இராவத் பெயர் சூட்டினார் எனப் பரவும் தகவல் தவறானது. அதற்கான கோரிக்கையே பாஜகவினரால் முன்வைக்கப்பட்டு வருகிறது என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க