YouTurn

அரசு பள்ளியை நவோதயா பள்ளி என பகிர்ந்த ஹெச்.ராஜா !

அரசு பள்ளியை நவோதயா பள்ளி என பகிர்ந்த ஹெச்.ராஜா !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் தொடங்க எப்பொழுதும் எதிர்ப்புகள் இருக்கும். இந்நிலையில், மத்திய அரசால் நடத்தப்படும் நவோதயா பள்ளிகள் எத்தனை வசதியுடன் கட்டுப்பட்டுள்ளன என்று வந்தே மாதரம் எனும் முகநூல் பக்கத்தில் ஜூன் 14-ம் தேதி பதிவிட்டு இருந்தனர். அதனை, ஜூன் 14-ம் தேதி பாஜக தேசிய செயலாளர்...

பரவிய செய்தி

மத்திய அரசால் இலவசமாக நடத்தப்படும் நவோதய பள்ளி எவ்வளவு வசதியுடன் கட்டப்பட்டுள்ளன.

விரிவான விளக்கம்

நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் தொடங்க எப்பொழுதும் எதிர்ப்புகள் இருக்கும். இந்நிலையில், மத்திய அரசால் நடத்தப்படும் நவோதயா பள்ளிகள் எத்தனை வசதியுடன் கட்டுப்பட்டுள்ளன என்று வந்தே மாதரம் எனும் முகநூல் பக்கத்தில் ஜூன் 14-ம் தேதி பதிவிட்டு இருந்தனர். அதனை, ஜூன் 14-ம் தேதி பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் முகநூல் பக்கத்தில் " தகவலுக்கு " எனக் குறிப்பிட்டு பகிரப்பட்டு உள்ளது.



அப்பதிவின் கம்மென்ட்களில், வீடியோவில் டெல்லி அரசு பள்ளி என கூறியதை கூட பார்க்காமல் பகிர்ந்து உள்ளீர்கள், ஹெச்.ராஜாவின் அட்மின் தவறாக பகிர்ந்து உள்ளார் என கிண்டல் செய்து உள்ளனர். ஹெச்.ராஜா முகநூலில் பகிர்ந்த அந்த வீடியோவில் தெளிவாக டெல்லி அரசு பள்ளி எனக் குறிப்பிட்டு உள்ளார். அதை கவனிக்காமல் மத்திய அரசின் நவோதயா பள்ளிகள் என தவறான தகவலை பகிர்ந்து உள்ளனர்.

டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவால் ஆட்சியில் அரசு பள்ளிகளின் கட்டமைப்பு தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாற்றப்பட்டு வருகின்றன. அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை படிக்க பெற்றோர்களே முன்வருவதாக செய்திகளில் வெளியாகின.



ஜூன் 28, 2018-ல் டெல்லி அரசு பள்ளிகள் குறித்து டெல்லியின் சுகாதாரம் மற்றும் கல்வி அமைச்சரான மனிஷ் சிசோடியா CNBC-TV18-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருப்பார். அதில், அரசு பள்ளியின் பகுதிகள் வீடியோவில் தெளிவாக காட்டப்பட்டு இருக்கும்.



1986-ம் ஆண்டில் இந்திய அரசால் டெல்லியில் நிறுவப்பட்ட ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வருகிறது. டெல்லியில் 30 ஆண்டுகளை கடந்து நவோதயா பள்ளி இயங்கி வருகிறது. ஆனால், டெல்லியில் உள்ள அரசு பள்ளியை நவோதயா பள்ளி என தவறான தகவலை நம்ப வைக்க முயற்சிக்கின்றனர்.

நவோதயா பள்ளிகள் என்றால் என்ன ?

ஒரு மாநிலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு நவோதயா பள்ளி சிபிஎஸ்இ தரத்தில் அமைக்கப்படும். அதற்கு மாநில அரசு நிலம் வழங்கினால் மட்டும் போதும், நிதியை மத்திய அரசே ஒதுக்கி பள்ளியை தொடங்கும்.



நவோதயா பள்ளிகள் மத்திய பிஜேபி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் என பெரும்பாலானோர் நினைக்கின்றனர். கிராமப்புற மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கு, மாணவர்களுக்கு உணவு, உறைவிடம் உடன் கூடிய நவோதயா பள்ளிகளை ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒன்று என தொடங்க வேண்டும் என்ற கல்விக் கொள்கை 1986-ம் ஆண்டு வகுக்கப்பட்டது.

இதில், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் சேரும் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதில், 75 சதவீதம் கிராமப்புற மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது.

எதிர்ப்பு ஏன் ?

நவோதயா பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையில் தாய்மொழியில் கல்வி பயின்றாலும், 8-ம் வகுப்பிற்கு பிறகு இந்தி மற்றும் ஆங்கில மொழியே பயிற்று மொழியாக இருப்பதால் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது.

நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் எதிர்க்க பல காரணங்கள் உள்ளன. மாவட்டத்திற்கு ஒரு பள்ளியில் தோராயமாக 3,000 மாணவர்கள் என வைத்துக் கொண்டால், இதில் பாகுபாடு இருப்பதாக பார்க்கப்படுகிறது. மேலும், நவோதயா பள்ளிகளுக்கான நிதியினைக் கொண்டு இங்குள்ள அரசு பள்ளிகளின் தரத்தினால் உயர்த்தினால் அனைவரும் பயன்பெறுவர் என்றும் கேள்விகளை எழுப்புகின்றனர்

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…

பொய்

டெல்லி மாணவர்கள் போராட்டத்தை ஆதரிப்பாக ‘வங்கதேச ஜமாஅத்-இ-இஸ்லாமி’ கட்சி அறிக்கை வெளியிட்டதா?

‘வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி’ பெயரில் பரப்பப்படும் இந்த அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டது என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.

பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…