யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
முட்டை செடியில் விளைய வைத்துள்ளனர். டில்லி IIT ல் உள்ளவர்கள்.முட்டை சைவமா அசைவமா என விவாதம் நடைபெற்றுக் கொண்டுள்ளது. சைவமாகவே செடியில் விளைவிக்கப்பட்ட முட்டையில் அனைத்து சத்துக்களும் உள்ளன.

Facebook link | Archive link

Facebook link | Archive link
விரிவான விளக்கம்
செடியில் தொங்கிக் கொண்டிருக்கும் முட்டையை உடைத்து உள்ளே இருப்பதை எடுத்து காண்பிக்கும் காட்சிகளில் தொடங்குகிறது அவ்வீடியோ. பின்னர், டெல்லி ஐஐடியைச் சேர்ந்தவர்கள் கோழி முட்டைக்கு மாற்றாக கண்டுபிடித்த உணவு தொடர்பான கன்னட செய்தியின் காட்சிகள் இடம்பெற்று உள்ளன. இந்த வீடியோவை வைத்து டெல்லி ஐஐடி-யைச் சேர்ந்தவர்கள் செடியில் விளையும் முட்டையைக் கண்டறிந்து உள்ளதாக சமூக வலைதளங்களில் இந்திய அளவில் பரப்பி வருகிறார்கள்.

உண்மை என்ன ?
டெல்லி ஐஐடி-யைச் சேர்ந்தவர்கள் செடியில் விளையும் முட்டையைக் கண்டுபிடித்ததாக பரவும் வீடியோ மற்றும் தகவல் தவறானது. அவர்கள் கோழி முட்டைக்கு மாற்றாக அதே சுவை, புரதம் நிறைந்த சைவ முட்டை உணவை கண்டுபிடித்து உள்ளனர்.

2019 செப்டம்பர் மாதம் வெளியான தி இந்தியன் எஸ்பிரெஸ் செய்தியில், " டெல்லி இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி(ஐஐடி) தாவரத்தின் அடிப்படையிலான " முட்டையை " உருவாக்கி உள்ளது. விரைவில் தாவரத்தின் அடிப்படையில் இருந்து மட்டன், மாட்டிறைச்சி, கோழி, வான்கோழி போன்றவற்றை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த சைவ அல்லது போலி இறைச்சி ஆனது அசலுக்கு ஒத்தவையாக இருக்கும் மற்றும் அவை ஆரோக்கியமான மாற்றாக " சுற்றுச்சூழல் நட்புடன் " ஆய்வகங்களுக்குள் உருவாக்கப்படுகின்றன.
செப்டம்பர் 21-ம் தேதி ஐஐடி டெல்லியில் தொழில்துறை தின கொண்டாட்டத்தின் போது மூங்(பச்சை பயிறு) மூலம் செய்யப்பட்ட ஒரு முட்டை காட்சிப்படுத்தப்படும். இந்த ஆராய்ச்சிக்கு டெல்லியின் ஊரக வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப மையத்தின் உதவி பேராசிரியர் காவ்யா தஷோரா தலைமை தாங்குகிறார் " எனக் கூறப்பட்டுள்ளது.
ஐஐடி டெல்லியில் தொழில்துறை தின கொண்டாட்டத்தின் போது சைவ முட்டை உணவு செய்து காட்டிய வீடியோவை தி பிரிண்ட் வெளியிட்டு இருக்கிறது. தாவரத்தில் இருந்து முட்டை எனக் கூறுவதற்கு பொருள் சைவ முறையில் தாவரத்தில் இருந்து கிடைக்கும் பொருட்களை வைத்து செய்யப்படும் உணவாகும். அதையே டெல்லி ஐஐடி-யைச் சேர்ந்தவர்கள் செய்து காட்டி உள்ளனர், முட்டையை செடியில் விளைத்து அல்ல.
சில மாதங்களுக்கு முன்பே வெள்ளை கத்திரிக்காய் செடியைக் காண்பித்து முட்டை செடி என கிண்டலுக்காக சமூக வலைதளங்களில் வைரலாக்கினர். அதேபோன்று, வெள்ளை கத்தரிக்காய் செடியில் முட்டையை ஒட்ட வைத்து செடியில் முட்டை விளைந்து உள்ளதாக எடுத்த கிண்டல் வீடியோவை தவறாகப் பரப்பி வருகிறார்கள். கன்னட செய்தியிலும் வெள்ளை கத்திரிக்காய் செடியின் புகைப்படம் காண்பிக்கப்பட்டு இருந்ததால் குழப்பம் உண்டாகி இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், டெல்லி ஐஐடி-யைச் சேர்ந்தவர்கள் சைவ முட்டை உணவை கண்டுபிடித்ததை செடியில் முட்டையை விளைய வைத்ததாக தவறான செய்தியை பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.