YouTurn

டெல்லி சிங்கு எல்லையில் போராடும் விவசாயிகள் அமைத்த கூடாரமா?

டெல்லி சிங்கு எல்லையில் போராடும் விவசாயிகள் அமைத்த கூடாரமா?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

கும்பமேலா கூடாரம் அல்ல, டெல்லியில் விவசாயிகள் உருவாக்கிய தற்காலிக தங்குமிடங்கள்.



Archive link

விரிவான விளக்கம்

டெல்லி எல்லையில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள் கூடாரங்களை அமைத்து மழை மற்றும் கடுமையான பனிக்கு இடையே போராடி வருகின்றனர். இப்படி போராடி வரும் விவசாயிகள் டெல்லி எல்லையான சிங்கு எல்லையில் அமைத்த கூடாரம் என இப்புகைப்படம் இந்திய அளவில் வைரலாகி வருகிறது.

உண்மை என்ன ? 



வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், kerranelamassa.fi எனும் இணையதளத்தில் 2013-ம் ஆண்டு நடைபெற்ற மகா கும்பமேளாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படமென வைரலாகும் புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.

getty images தளத்தில், கும்பமேளாவில் அமைக்கப்பட்ட கூடாரங்களை ஆகாய மார்க்கமாக எடுத்த புகைப்படமும் இடம்பெற்று இருக்கிறது.



2020-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி NDTV செய்தியில், சிங்கு எல்லையில் உள்ள பெட்ரோல் பங்கில் போராடும் விவசாயிகள் கூடாரங்கள் அமைத்து இருப்பதை " டென்ட் சிட்டி " என புகைப்படத்துடன் குறிப்பிட்டு உள்ளனர்.



முடிவு :

நம் தேடலில், 2013-ம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற மகா கும்பமேளாவின் போது அமைக்கப்பட்ட கூடாரங்களின் புகைப்படத்தை டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போது அமைக்கப்பட்ட கூடாரங்கள் என தவறாகப் பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க