YouTurn

ஊட்டி-கோவை சாலையில் மான்களா ?| வைரலாகும் புகைப்படங்கள் !

ஊட்டி-கோவை சாலையில் மான்களா ?| வைரலாகும் புகைப்படங்கள் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு நிலவி வரும் வேளையில் மக்கள் நடமாட்டம் குறைந்து உள்ளது. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இந்நிலையில், ஊட்டி-கோவை வழிச்சாலையில் மான்கள் கூட்டமாய் இருப்பதாக இப்புகைப்படம் முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்டவையில் வைரலாகி வருகிறது...

பரவிய செய்தி

ஊட்டி - கோயம்புத்தூர் சாலை அதன் உண்மையான உரிமையாளர்களால் மீட்டெடுக்கப்பட்டது.

விரிவான விளக்கம்

நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு நிலவி வரும் வேளையில் மக்கள் நடமாட்டம் குறைந்து உள்ளது. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இந்நிலையில், ஊட்டி-கோவை வழிச்சாலையில் மான்கள் கூட்டமாய் இருப்பதாக இப்புகைப்படம் முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்டவையில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2017 அக்டோபர் 17-ம் தேதி வெல்கம் டு நேச்சர் எனும் ட்விட்டர் பக்கத்தில் " The Japanese city of Nara is renown for its deer " என வைரலாகும் புகைப்படத்தின் முழுமையான புகைப்படம் வெளியாகி இருக்கிறது.



Twitter link | archived link 

சாலையின் நடுவே இருக்கும் அறிவிப்பு பலகையில் அந்நாட்டு மொழியில் இடம்பெற்ற அறிவிப்பையும் காணலாம்.



இப்புகைப்படம் எப்பொழுது எடுக்கப்பட்டது எனத் தேடுகையில், 2014- ecoblog எனும் தளத்தில் " The fawns of Nara in Japan invade the city streets "  என்ற தலைப்பில் வெளியான செய்தி கிடைத்தது. 



ஜப்பான் நாட்டில் உள்ள நாரா நகரத்தின் சாலைகளில் மான்கள் வந்து அமர்ந்து கொள்ளும் சம்பவங்கள் பலமுறை நிகழ்ந்து உள்ளன. புகைப்படத்தில் மான்கள் அமர்ந்து இருக்கும் பகுதிக்கு அருகே நாரா மான்கள் பூங்கா அமைந்துள்ளது. அங்கிருந்து மான்கள் உணவுக்காகவும், மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்து எழும் ஒலியாலும் ஈர்க்கப்பட்டு அங்கு வருவதாக கூறப்பட்டுள்ளது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…