YouTurn

தீபாவளிக்கு மாமிசம் சாப்பிடுபவர்கள் இந்துக்கள் அல்ல என ஹெச்.ராஜா கூறினாரா ?

தீபாவளிக்கு மாமிசம் சாப்பிடுபவர்கள் இந்துக்கள் அல்ல என ஹெச்.ராஜா கூறினாரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

தீபாவளி  அன்று மாமிசம் சாப்பிடுபவர்கள் ஹிந்துக்களே அல்ல. தமிழ்நாட்டில் பா.ஜ.க ஆட்சி அமைந்ததும் தீபாவளி அன்று இறைச்சிக் கடைகள் மூடப்படும்- ஹெச்.ராஜா



Facebook link | Archive link 

விரிவான விளக்கம்

பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ஹெச்.ராஜா, தீபாவளி நாளன்று அசைவ உணவு உண்பவர்களை இந்துக்களே இல்லை என்றும், தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தீபாவளிக்கு இறைச்சிக் கடைகள் மூடப்படும் எனக் கூறியதாக ஓர் புகைப்படம் முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.





உண்மை என்ன ?  

தமிழகத்தில் தீபாவளி நாளன்று அசைவ உணவை சமைத்து உண்பது பலரது வீடுகளில் வழக்கத்தில் உள்ளது. அதற்கு எதிராக ஹெச்.ராஜா கூறியதாக இப்படியொரு எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தை பரப்பி வருகிறார்கள்.

ஹெச்.ராஜா இப்படியொரு கருத்தைக் கூறியதாக எடிட் செய்யப்பட்ட இப்புகைப்படம் மட்டுமே சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது. மாறாக, செய்தி ஊடகங்களின் நியூஸ் கார்டோ, ட்விட்டர் பதிவோ அல்லது வீடியோ என ஏதும் பகிரப்படவில்லை. ஆதாரமில்லாத உருவாக்கப்பட்ட செய்தி ஒன்றை பகிர்ந்து வருகிறார்கள் என புரிந்து கொள்ள முடிந்தது.



இதையடுத்து, ஹெச்.ராஜா உடைய அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களை ஆராய்கையில், " பாரதம் உலகின் குருவாய் விளங்கிட அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கிட இந்த தீபாவளி திருநாளில் வாழ்த்துகிறேன்." என தீபாவளிக்காக வாழ்த்து கூறிய 5 நிமிட வீடியோ மற்றும் வாழ்த்து புகைப்படம் ஒன்று மட்டுமே வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவிலும் அசைவ உணவு குறித்து ஏதும் பேசவில்லை.



Facebook link | Archive link

முடிவு : 

நம் தேடலில், தீபாவளி  அன்று மாமிசம் சாப்பிடுபவர்கள் ஹிந்துக்களே அல்ல. தமிழ்நாட்டில் பா.ஜ.க ஆட்சி அமைந்ததும் தீபாவளி அன்று இறைச்சிக் கடைகள் மூடப்படும் என ஹெச்.ராஜா கூறியதாக பரவும் தகவல் வதந்தியே என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க