YouTurn

பெண்ணுடன் இன்பநிதி அந்தரங்கமாக இருப்பது போன்று போலியாக உருவாக்கப்பட்ட Deep Fake புகைப்படம்!

பெண்ணுடன் இன்பநிதி அந்தரங்கமாக இருப்பது போன்று போலியாக உருவாக்கப்பட்ட Deep Fake புகைப்படம்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பரவிவரும் இந்த புகைப்படம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் போலியாக உருவாக்கப்பட்டது.

பரவிய செய்தி

பெரியார் பேரன்னா சும்மாவா..



X Link | Archive Link

விரிவான விளக்கம்

உதயநிதி ஸ்டாலினின் மகனான இன்பநிதி கடந்த செப்டம்பர் மாதம் ‘Red Giant Movies’ தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை பொறுப்புக்கு வருவதாக செய்திகள் வெளியாகின. அதிலிருந்து, உதயநிதி போலவே இன்பநிதியும் தயாரிப்பாளராக அறிமுகமாகி பின்னர் நடிகர் அதன் பின்னர் அரசியலுக்கு வரவிருக்கிறார் என்று சமூக வலைத்தளத்தில் பேசப்பட்டு வந்தது.

 

இந்நிலையில், இன்பநிதி ஒரு பெண்ணுடன் இருப்பது போன்ற அந்தரங்கமான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் சிலர் பரப்பி வருகிறார்கள்.



X Link


உண்மை என்ன?

 

பரப்பப்படும் இந்த புகைப்படம் உண்மையானதா என்று ‘Hive Moderation’ என்ற வலைத்தளத்தில் சோதனை செய்தோம்.

 

அதில் இந்தப் புகைப்படம் முற்றிலும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலியான புகைப்படம் என்பது தெரியவருகிறது.


 

இதுபோன்று சமூகத்தில் பிரபலமானவர்களின் புகைப்படங்களை Deep Fake என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கொண்டு தவறாக சித்தரிக்கும் போக்கு சமீபகாலத்தில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

முடிவு:

 

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் போலியாக உருவாக்கப்பட்ட புகைப்படத்தை கொண்டு இன்பநிதி ஒரு பெண்ணுடன் அந்தரங்கமாக இருப்பதாக தவறாக பரப்பி வருகிறார்கள்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க