
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

X Link | Archive Link
விரிவான விளக்கம்
கடந்த 2023ஆம் ஆண்டில் தொடங்கிய இஸ்ரேல் பாலஸ்தீனப் போர் இன்றுவரை தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் காசாவில் இறந்ததாகக் கூறப்பட்ட குழந்தை கையில் செல்போன் வைத்து செய்தியனுப்பும் காட்சி என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
Yea…… these people….. sheesh #pathetic https://t.co/kuLtXuuSuO
— Julz (@JulzFighter) June 18, 2024
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில் இது கடந்த 2023ஆம் ஆண்டிலேயே வைரலாகப் பரவி வந்துள்ளதைக் காணமுடிந்தது.
Allah's Miracle!
A “corpse” in Gaza texting on his phone pic.twitter.com/TM8EvupDC6
— Eretz Israel (@EretzIsrael) October 26, 2023
When you are dead but you forgot to clear your Google Search history pic.twitter.com/zJGAXn3gxY
— Poorva Bhawsar (@Poorvaholics) November 29, 2022
இதன்மூலம் தாய்லாந்து நாட்டில் அமைந்துள்ள சென்ட்ரல் கோரட் என்ற மாலில் நடைபெற்ற ஹாலோவீன் (Halloween) விழாவில் கலந்துகொண்ட குழந்தைகளின் புகைப்படங்களை Surattana Sawadkit என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவுசெய்துள்ளார் என்பதை அறியமுடிகிறது.
இதனை பலரும் காசாவில் இறந்த குழந்தை கையில் செல்போனில் செய்தியனுப்பும் காட்சி என்று கூறி 2023ஆம் ஆண்டிலிருந்து தவறாகப் பரப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க: பாலஸ்தீனத்தின் மீது அனுதாபம் ஏற்பட போரில் பாலஸ்தீனியர்கள் நடிக்கிறார்களா?
முடிவு:
நம் தேடலில், காசாவில் இறந்த குழந்தை கையில் மொபைலுடன் விளையாடும் காட்சி எனப் பரவும் புகைப்படம் 2022ஆம் ஆண்டில் தாய்லாந்தில் எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் என்பது தெளிவாகிறது.