யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
பாஜக தலைவருடைய மகனாம் டான்ஸ் இந்தியா டான்ஸ் நிகழ்ச்சி நொய்டாவில் நடந்ததில் பங்கு கொள்கிறார். நான் இதில் கண்டிப்பாக தேர்வாகவேண்டும் இல்லையென்றால் நடப்பதே வேறு என் தந்தை பெரிய ஆள் என்று நடுவர்களை மிரட்டுகிறார். இதற்கு பயப்படாத நடுவர்களில் ஒருவர் மைக்கை வாங்கி கொண்டு விரட்டி விடுகிறார். போனவன் தந்தையுடன் வந்து மேடையில் செய்யும் அலப்பறை தான் இந்த வீடியோ.

விரிவான விளக்கம்
நொய்டாவில் நிகழ்ந்த டான்ஸ் இந்தியா டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நபர் தன்னை கண்டிப்பாக தேர்வு செய்ய வேண்டும், இல்லையென்றால் நடப்பதே வேறு என் தந்தை பெரிய ஆள் என்று நடுவர்களை மிரட்டுகிறார், நடுவர்களால் விரட்டப்பட்டு அங்கிருந்து சென்ற நபர் தன் தந்தையுடன் வருகிறார். அவரும் நடுவர்களை மிரட்டுகிறார், பாதுகாப்பிற்கு இருந்தவர்கள் தடுக்க முயற்சி செய்யும் காட்சி கொண்ட 5 நிமிட வீடியோ தற்போது வைரல் செய்யப்படுகிறது.

பாஜக தலைவர் பகிரங்கமாக நிகழ்ச்சியின் நடுவர்களை மிரட்டுவதாக இவ்வீடியோ இந்திய அளவில் அரசியல் சார்ந்து பரப்பப்பட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டது.
உண்மை என்ன ?

வைரலாகும் வீடியோ காட்சியானது 2015-ம் ஆண்டு ஜூன் 27-ம் தேதி ஜீடிவி-யில் ஒளிபரப்பு செய்யப்பட்ட டான்ஸ் இந்தியா டான்ஸ் சீசன் 5-யின் முதல் எபிசோடில் இடம்பெற்று இருக்கிறது. இதற்காக டெல்லியில் போட்டியாளர்கள் தேர்வு நடைபெற்றது. எபிசோடில் 40வது நிமிடத்தில் இருந்து அந்த இளைஞர் பாடலுக்கு மோசமாக நடனமாடுகிறார். இடையிலேயே நடுவர்கள் அவரை நிறுத்த சொல்கிறார்கள். அவர் தேர்வு செய்யப்படவில்லை. 40-வது நிமிடத்தில் இருந்து வைரலாகும் காட்சி இடம்பெற தொடங்குகிறது.

அதற்கு பிறகு மேடையில் பிரச்சனை பெரிதாகுவதை பார்த்த நடுவர்களில் ஒருவர் 46-வது நிமிடத்தில் இருக்கையில் இருந்து எழுந்து மேடைக்கு சென்று பேசிக் கொண்டிருக்கும் போதே அங்கிருந்தவர்கள் நடனமாடி கிண்டல் செய்கிறார்கள். அந்த இளைஞரின் தந்தையாக வந்தவரும், நடுவருக்கு சிரித்து கட்டி தழுவிக் கொள்கிறார்கள். நடுவர்களையே பிராங்க் செய்த வீடியோ என புரிகிறது.
Facebook link | archive link
இந்த பிராங்க் வீடியோ பகுதி மட்டும் தனியாக எடுத்து முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சிறந்த பிராங்க் வீடியோ என பகிர்ந்து இருக்கிறார்கள். ஆனால், வீடியோவின் இறுதியில் பிராங்க் என நடனமாடும் காட்சியை மட்டும் நீக்கி விட்டு அரசியல் சார்ந்து தவறாக பரப்பி வருகிறார்கள்.
முடிவு :
நம் தேடலில், நொய்டாவில் நடைபெற்ற டான்ஸ் இந்தியா டான்ஸ் நிகழ்ச்சியில் பாஜக தலைவர் வந்து மிரட்டியதாக பரவும் வீடியோ 2015 சீசனில் நடைபெற்ற பிராங்க் செய்யப்பட்ட காட்சிகள் என புரிந்து கொள்ள முடிகிறது.