YouTurn

தலித் மக்களுக்கான சலுகை குறித்து இளையராஜா விமர்சித்ததாகப் பரவும் வதந்தி !

தலித் மக்களுக்கான சலுகை குறித்து இளையராஜா விமர்சித்ததாகப் பரவும் வதந்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

சலுகை என்பது ஏழைகளின் உரிமைகள் அதை ஏன் தாழ்த்தபட்டவன் என்ற போர்வையில் தலித்களுக்கேச் வழங்க வேண்டும்? எல்லா சாதியிலும் தானே ஏழைகள் உள்ளனர். தலீத் என்று இலவச சலுகைகள் தருவதால் தான் அச்சமூக இளைஞர்கள் கஷ்டங்கள் தெரியாமல் சமூகத்திற்கு கேடான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் - இளையராஜா



 

Archive link 

விரிவான விளக்கம்

இசைஞானி இளையராஜா, அனைத்து சாதியிலும் ஏழைகள் இருப்பதாகவும், ஆனால் தாழ்த்தப்பட்டோருக்கு மட்டுமே சலுகை வழங்குவதாக கருத்து ஒன்றைக் கூறி உள்ளதாக அவரின் புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் இப்பதிவு வைரலாகி வருகிறது.





கடந்த 2018-ம் ஆண்டில் இருந்தே இளையராஜா இப்படியொரு கருத்தைக் கூறியதாக சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் சட்டமேதை அம்பேத்கரையும், பிரதமர் நரேந்திர மோடியையும் இளையராஜா ஒப்பிட்டதால், அவருக்கு எதிராக கடும் விமர்சனங்களும், ஆதரவு கருத்துகளும சமூக வலைதளங்களில் உருவாகி உள்ளது. இந்நிலையில், 4 ஆண்டுகளுக்கு முன்பாக பரவிய பதிவை தற்போது மீண்டும் பரப்பி வருகிறார்கள்.

உண்மை என்ன ? 

இளையராஜா அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் பற்றி சமீபத்திலோ அல்லது 4 ஆண்டுகளுக்கு முன்பாகவோ இப்படியொரு கருத்தைக் கூறியதாக எந்த தகவலும் இல்லை, எந்த செய்திகளும் இல்லை.

4 ஆண்டுகளுக்கு முன்பாக இளையராஜா பற்றிய பரபரப்பு செய்திகள் ஏதும் வெளியாகியதாக எனத் தேடுகையில், 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் தலித் என்பதால் இளையராஜாவிற்கு பத்ம விபூஷண் விருது வழங்குவதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட கட்டுரை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் அதற்காக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மன்னிப்பும் கேட்டு செய்தி வெளியிட்டது.

இதையடுத்து, இளையராஜா தாழ்த்தப்பட்டவர்களுக்கு சலுகை வழங்குவது குறித்து பேசியதாக சமூக வலைதளங்களில் பரவி இருக்கிறது. ஆனால், அது வதந்தி. அவர் அப்படி எங்கும் கூறவில்லை என இளையராஜாவின் வழக்கறிஞர் 2019 மே மாதம் தி நியூஸ் மினிட் இணையதளத்திற்கு தெரிவித்து இருக்கிறார்.

முடிவு : 

நம் தேடலில், சலுகை என்பது ஏழைகளின் உரிமைகள் அதை ஏன் தாழ்த்தபட்டவன் என்ற போர்வையில் தலித்களுக்கேச் வழங்க வேண்டும்? எல்லா சாதியிலும் தானே ஏழைகள் உள்ளனர். தலீத் என்று இலவச சலுகைகள் தருவதால் தான் அச்சமூக இளைஞர்கள் கஷ்டங்கள் தெரியாமல் சமூகத்திற்கு கேடான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என இளையராஜா பேசியதாக பரவும் தகவல் வதந்தியே என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க