YouTurn

மகளை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த யூசுப்பாயை சுட்டுக்கொன்ற தந்தை எனப் பரவும் பொய் !

மகளை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த யூசுப்பாயை சுட்டுக்கொன்ற தந்தை எனப் பரவும் பொய் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

அன்பு மகளை கடத்தி சென்று பாலியல் கொடுமை செய்த யூசுப் பாயை தலையில் சுட்டு கொன்ற தந்தை. உடனடி தண்டனை..

X Link | Archive Link

விரிவான விளக்கம்

மகளை கடத்தி சென்ற யூசுப்பாய் என்ற முஸ்லீமை சுட்டுக்கொன்ற தந்தை என்று கூறி 21 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மேலும் அந்த வீடியோவில், கைவிலங்கு மாட்டப்பட்டு நடந்து வரும் இளைஞர் ஒருவரின் தலையில், பின்னாடி மறைந்து நிற்கும் ஒருவர் துப்பாக்கியால் சுடுவதையும், பின்னர் இருவர் ஓடி வந்து அவரைத் தடுப்பதையும் பார்க்க முடிகிறது.





உண்மை என்ன ?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ கடந்த மார்ச் 16, 1984 அன்று அமெரிக்காவில் மிகுந்த பேசு பொருளாக்கப்பட்ட கேரி பிளாச் ( 1985 Gary Plauche case ) வழக்கோடு தொடர்புடைய வீடியோ என்பதை அறிய முடிந்தது.

கேரி பிளாச்சின் 11 வயது மகன் ஜோடி , 25 வயதான ஜெஃப்ரி டூசெட் (Jeffery Doucet) என்ற கராத்தே ஆசிரியரிடம் கராத்தே கற்றுக்கொண்டுள்ளான். ஜோடியின் பெற்றோருக்குத் தெரியாமல், டூசெட் குறைந்தது ஒரு வருடமாக சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஒருநாள் டூசெட், ஜோடியைக் கடத்திச் சென்று கலிபோர்னியாவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று, அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். எனவே பல்வேறு தேடுதல்களுக்கு பின்பு டூசெட் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக கூட்டி செல்லப்பட்டபோது தான், கேரி பிளாச்சால் சுடப்பட்டுள்ளார் என்பதை The advocate ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதே போன்று, U.S. The Sun ஊடகம் சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோவைக் குறிப்பிட்டு கடந்த 2021ல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "தனது மகனைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபரை சுட்டுக் கொன்ற தந்தைக்கு இன்று 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, சமூக சேவை செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்றுக் குறிப்பிடப்பட்டிருந்தது.



எனவே பரவி வரும் வீடியோ தொடர்பாக, தனது மகளை கடத்தி சென்ற யூசுப்பாய் என்ற முஸ்லீமை சுட்டுக்கொன்ற தந்தை எனப் பரவும் செய்திகள் தவறானவை. இந்த வீடியோவில் சுடப்பட்டவர் பெயர் ஜெஃப்ரி டூசெட் (Jeffery Doucet). மேலும் தனது மகனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்காக தான், கேரி பிளாச், ஜெஃப்ரி டூசெட்டை விமான நிலையத்தில் வைத்து சுட்டுக் கொன்றுள்ளார். 

மேலும் படிக்க: போலந்து நாட்டில் 5 லட்சம் கிறிஸ்தவர்கள் இந்து மதத்திற்கு மாறியதாகப் பரவும் பொய் !

மேலும் படிக்க: அபுதாபியில் இந்து கோயில் திறப்பிற்கு முன் மழை.. முதல் முறையாக மழை பெய்ததாகப் பரவும் பொய் !

முடிவு:

நம் தேடலில், தனது மகளை கடத்தி சென்று பாலியல் கொடுமை செய்த யூசுப்பாயை சுட்டுக்கொன்ற தந்தை என்று கூறி பரப்பப்படும் வீடியோ தவறான தகவல் என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க