YouTurn

டாஸ்மாக் நிறுவனத்தின் இணையதளத்தில் திமுக அலுவலகம் என இருக்கிறதா ?

டாஸ்மாக் நிறுவனத்தின் இணையதளத்தில் திமுக அலுவலகம் என இருக்கிறதா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகங்கள் திமுக அலுவலகங்களாக எப்போ மாற்றப்பட்டது முதலமைச்சரே !



Twitter link | Archive link

விரிவான விளக்கம்

தமிழ்நாடு ஸ்டேட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் லிமிடெட் (டாஸ்மாக்) இணையதளத்தில் மாவட்ட மேலாளர்கள் அலுவலகங்கள் பட்டியலில் ‘திமுக அலுவலகம்’ என இருப்பதாக ஸ்கிரீன் ஷார்ட் ஒன்றை பாஜக தகவல் தொழில் நுட்ப மாநில தலைவர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

https://twitter.com/dravidampazhagu/status/1613080570908790784

Archive link

அதில், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகங்கள் எப்போது திமுக அலுவலகங்களாக மாற்றப்பட்டது எனத் தமிழ்நாடு முதலமைச்சரை டக் செய்து பதிவிட்டுள்ளார். இதனை பாஜக மற்றும் அதிமுகவைச் சேர்ந்த பலரும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

https://twitter.com/vimalAiadmk/status/1612846611973181440

Archive link

உண்மை என்ன ? 

சி.டி.ஆர்.நிர்மல் குமார் டிவீட் செய்துள்ள ஸ்கிரீன் ஷார்ட் பற்றி டாஸ்மாக் இணையத்தில் தேடிய போது, அந்த இணையதளம் முழுவதும் ஆங்கிலத்தில் இருப்பதைக் காண முடிந்தது.  தமிழ்நாடு அரசின் மற்ற இணையதளங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டிலும் பயன்படுத்தக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால், டாஸ்மாக் இணையதளம் அப்படி இல்லை. 

இதற்கு மாற்றாக, கூகுள் டிரான்ஸ்லேட் மூலம் இணையதளத்தின் மொழியினை மாற்றிப் பயன்படுத்தக் கூடிய வசதி கொண்டு வழிவகை செய்துள்ளனர். 

[caption id="attachment_38163" align="aligncenter" width="1164"] டாஸ்மாக் இணையதளம் ஆங்கிலத்தில்[/caption]

ஆங்கிலத்தில் உள்ள டாஸ்மாக் இணையதளத்தில் 'DISTRICT MANAGERS OFFICES' என்ற பட்டியலில் 'DM Office' என்றே இருக்கிறது. அதனைத் தமிழில் மொழி பெயர்த்துப் படிக்க முயற்சி செய்யும் போது, District Managers Offices என்பது ‘மாவட்ட மேலாளர்கள் அலுவலகங்கள்’ என்றும் DM Office என்பது 'திமுக அலுவலகம்' என்றும் மாறுவதைக் காண முடிகிறது. 

[caption id="attachment_38165" align="aligncenter" width="1177"] டாஸ்மாக் இணையதளம் தமிழ் மொழி பெயர்ப்பில்[/caption]

அவ்வாறு மொழி பெயர்த்துப் படிக்கும் போது இணையதளத்தின் மேல் பக்கம் Show original எனக் காண்பிக்கிறது. நிர்மல் குமார் பதிவிட்ட புகைப்படத்திலும் Show original என இருப்பதைக் காண முடிகிறது.



மேலும், கூகுள் ட்ரான்ஸ்லேடில் DM Office எனத் தனியாகத் தேடினாலும்  'திமுக அலுவலகம்' என்றே தமிழில் மொழி பெயர்க்கிறது. மேலும், 'DM' என்றால் 'திமுக' என்றும், 'ADM Office' என்றால் 'அதிமுக அலுவலகம்' என்றும் மொழி பெயர்க்கிறது. 



இதிலிருந்து, இது ஒரு மொழி பெயர்ப்பினால் ஏற்பட்ட தொழில்நுட்ப பிழை என்பதை அறிய முடிகிறது. இந்த தொழில்நுட்ப பிழைக்கும், திமுகவிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. 

முடிவு : 

நம் தேடலில், டாஸ்மாக் இணையதளத்தில் திமுக அலுவலகம் என இருப்பதாக சி.டி.ஆர்.நிர்மல் குமார் பதிவிட்டது ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கும் போது ஏற்பட்ட தொழில்நுட்ப பிழை என்பதை அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வு அறை ஏற்படுத்தி கொடுத்துள்ள முதலமைச்சர் விஜய் என்று பொய் செய்தி பரப்பும் தவெகவினர்!

சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு 300 சதுர அடியில் கழிப்பறை வசதியுடன் ஓய்வு அறைகள் அமைக்கப்படும் என்று முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் நவம்பர் 15, 2025 அன்ற…

தவறானது

கர்நாடகாவில் கல்லூரி மாணவர்களில் 7000 பேருக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளதா? தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

கர்நாடகாவில் தற்போது 7000 மாணவர்கள் HIV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவது திரிக்கப்பட்ட தவறான செய்தி என்று கர்நாடக AIDS தடுப்பு அமைப்பு விளக்…

தவறானது

தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் போலீஸ் காலில் விழுந்து கெஞ்சினாரா CJP தலைவர் அபிஜீத் தீப்கே?

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு டெல்லி போலீஸ் காலில் விழுந்து அபிஜீத் தீப்கே கெஞ்சிய போது எடுக்கப்பட்ட வீட…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க