YouTurn

புல்வாமா தியாகிகளுக்கு முதல் போட்டி வருமானத்தை அளிக்கும் CSK !

புல்வாமா தியாகிகளுக்கு முதல் போட்டி வருமானத்தை அளிக்கும் CSK !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

2019 ஆண்டிற்க்கான ஐ.பி.எல் போட்டிகள் நாளை தொடங்க உள்ள நிலையில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், மார்ச் 23-ம் தேதி சென்னை எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் CSK vs RCB போட்டியின் டிக்கெட் வருமானம் முழுவதும் காஷ்மீர் புல்வாமா...

பரவிய செய்தி

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்திற்கு முதல் போட்டிக்கான வருமானத்தை அளிக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.

விரிவான விளக்கம்

2019 ஆண்டிற்க்கான ஐ.பி.எல் போட்டிகள் நாளை தொடங்க உள்ள நிலையில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ் அணிகள் மோதுகின்றன.



இந்நிலையில், மார்ச் 23-ம் தேதி சென்னை எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் CSK vs RCB போட்டியின் டிக்கெட் வருமானம் முழுவதும் காஷ்மீர் புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்குவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அறிவித்துள்ளது.



" சென்னையின் முதல் போட்டியில் கிடைக்கும் வருவாயை உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு அளிக்கப்படும். அதற்கான காசோலையை அணியின் கேப்டன் எம்.எஸ் தோனி வழங்குவார் " என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இயக்குனர் ராகேஷ் சிங் அணியின் ட்விட்டரில் பதிவிட்டார்.



இரண்டு வருட தடைக்கு பிறகு மீண்டும் போட்டிக்கு வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் 2018 ஐ.பி.எல் போட்டியின் கோப்பையை வென்றது. சென்ற முறை தமிழகத்தில் ஐ.பி.எல் போட்டிகளுக்கு எதிரான நிலை இருந்ததால் போட்டிகள் வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட்டன.

ஆகையால், சென்னை அணி சொந்த மண்ணில் ஆடுவதை பார்க்க இளைஞர்கள் ஆர்வமாய் உள்ளதை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…

தவறானது

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.