YouTurn

சிஆர்பிஎஃப் வீரர்களின் மாற்றம் எனப் பரவும் இருவேறு பிரிவுகளின் புகைப்படங்கள் !

சிஆர்பிஎஃப் வீரர்களின் மாற்றம் எனப் பரவும் இருவேறு பிரிவுகளின் புகைப்படங்கள் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

இரும்பாக உறுதியாக வலிமையாக மாற்றப்பட்டுள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் போர்ஸ் அதிரடி மிரட்டல்!



Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

2012-ல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் நிலை 2022-ல் மோடி ஆட்சியில் இப்படி மாறியுள்ளதாக இரு புகைப்படங்கள் ஒப்பிடப்பட்டு இந்திய அளவில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.





உண்மை என்ன ?  

வைரல் செய்யப்படும் புகைப்படங்களில் முதலில் உள்ளதை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், " 2012 ஜூன் 27-ம் தேதி காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகரில் ஊரடங்கின் போது முஸ்லீம் பெண்களை சிஆர்பிஎஃப் பிரிவைச் சேர்ந்தவர் விசாரிப்பதாக alamy stock இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.



அடுத்ததாக உள்ள புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், " 2021 ஜனவரி 22-ம் தேதியன்று டெல்லியில் உள்ள ராஷ்ட்ரிய ரங்ஷாலா முகாமில் குடியரசு தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற பயிற்சியின் போது சிஆர்பிஎஃப் கமாண்டோ எச்சரிக்கையுடன் இருப்பதாக 2021 ஜனவரி 23-ம் தேதி Getty Images இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.





இப்படத்தில் இருக்கும் வீரர் CRPF Valley QAT (விரைவு நடவடிக்கைக் குழு) உறுப்பினர். இக்குழு ஜம்மு மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் செயல்படும் மற்றும் சிறப்புப் பணிகளுக்காகப் பணியாற்றும் சிஆர்பிஎஃப் உடைய உயரடுக்கு கமாண்டோ பிரிவு.



2021 டிசம்பர் 23-ம் தேதி நடைபெற்ற சிஆர்பிஎஃப் உடைய பாசிங் அவுட் அணிவகுப்பில்(POP) சிஆர்பிஎஃப் வீரர்கள் காக்கி நிற சீருடையை தற்போதும் பயன்படுத்துவதை பார்க்கலாம். மேலும், வெவ்வேறு அணிகளின் சீருடைகளில் வீரர்கள் இருப்பதை காணலாம்.

முடிவு : 

நம் தேடலில், தற்போதும் சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு காக்கி நிற சீருடை பயன்படுத்தப்பட்டு வருகிறது. வைரல் செய்யப்படும் புகைப்படங்கள் சிஆர்பிஎஃப் உடைய இருவேறு பிரிவைச் சேர்ந்தது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் செயல்படும் CRPF Valley QAT கமாண்டோ வீரரின் புகைப்படத்தை வைத்து தவறான ஒப்பீடு கூற்று பரப்பப்பட்டு வருகிறது என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க