யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
இளைஞர்கள் அனைவரும் காதலிக்க வேணடும். சாதி, மதங்கள் கடந்து காதல்; காதலிப்பதில் எந்த தவறும் இல்லை. அது ஒன்றும் தேச குற்றமல்ல. இளைஞர்கள் அனைவரும் காதலிக்க வேன்டும்; பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள வேணடும் - கே.பாலகிருஷ்ணன், மாநில செயலாளர்.

விரிவான விளக்கம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இளைஞர்கள் அனைவரும் காதலிக்க வேண்டும். சாதி, மதங்கள் கடந்து காதல்; காதலிப்பதில் எந்த தவறும் இல்லை. அது ஒன்றும் தேச குற்றமல்ல. இளைஞர்கள் அனைவரும் காதலிக்க வேண்டும்; பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனப் பேசியதாக நியூஸ் 7 தமிழ் ஊடகத்தில் ஒரு செய்தி வெளியிடப்பட்டது. இச்செய்தி தற்போது சமூக ஊடகத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
கடந்த ஆகஸ்ட் 21 தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பத்திரிகையாளர் சந்திப்பில் காதல் திருமணம் பற்றி பேசிய போது, காதலிப்பவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவர் பேசவில்லை.
Twitter link
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிந்தன், " காதல் திருமண விழாவில், இதே போல் எல்லா பெற்றோரும் காதல் மணங்களை ஆதரிக்க வேண்டும் என்று பேசினார். நியூஸ் 7 செய்தியில் பொருள் தவறாக வருகிறது. இருந்தாலும் அன்பு செய் என்ற செய்தி வலிமையானது " என ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
Facebook link
மேலும்,' இளைஞர்கள் காதலிக்க வேண்டும். சாதி மத பேதங்ளை துறந்து முற்போக்கு திசைவழியில் இணைய வேண்டும். அதுவே சிறந்த சமுதாயம் அமைப்பதற்கு பயன்படும். சிபிஐஎம் இதுபோன்ற காதல் திருமணங்களை எப்போதும் முன்னின்று நடந்தும். பெற்றோர்களும் இதுபோன்று திருமணத்தை ஆதரிக்க வேண்டும் " என கே.பாலகிருஷ்ணன் அளித்த விளக்கத்தை சிபிஐஎம் முகநூல் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
முடிவு :
நமது தேடலின் விளைவாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், காதலிப்பவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனக் கூறவில்லை, காதல் திருமணத்தை பெற்றோர்கள் ஆதரிக்க வேண்டும் என்றே பேசி இருக்கிறார். நியூஸ் 7 தமிழ் தவறான பொருளில் செய்தியைத் வெளியிட்டு நீக்கி இருக்கிறது என அறிய முடிகிறது.

காதல் திருமண விழாவில், இதே போல் எல்லா பெற்றோரும் காதல் மணங்களை ஆதரிக்க வேண்டும் என்று பேசினார். நியூஸ் 7 செய்தியில் பொருள் தவறாக வருகிறது. இருந்தாலும் ❤️ அன்பு செய் என்ற செய்தி வலிமையானது. https://t.co/L7bn9ShnYX
— சிந்தன் - Sindhan (@sindhan) August 22, 2022