யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கோவிட்-19 பெரும் தொற்று இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகையில் அதை குணப்படுத்தும் மருந்துகள் என சில மருந்துகளின் பெயர்கள், புகைப்படங்கள் ஃபார்வர்டு செய்யப்பட்டு வருகின்றன. மேற்காணும் ஃபார்வர்டு செய்தியில் இருக்கும் முரண்பட்ட தகவல்களை இக்கட்டுரையில் விளக்கி உள்ளோம். 1.ஃபாவிபிராவிர்...
பரவிய செய்தி
அன்புள்ள அனைவருக்கும், இறுதியாக நாம் அனைவரும் காத்திருந்த நல்ல செய்தி வந்துள்ளது. ஆந்திர பிரதேசம் ஹைதராபாத்தில் * ஹெட்ரோ ஹெல்த்கேர் சர்வீசஸ் * கோவிட்-19 தொற்றை குணப்படுத்தும் மருந்தைக் கொண்டு வந்துள்ளது. இது அமெரிக்க எஃப்.டி.ஏ மற்றும் யூரோபியன் யூனியன் ஃபெடரல் ட்ரக் ஆணையம் ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஊசியின் பெயர் : REMEDESIVIR. பிராண்ட் பெயர் : கொரோவேக்ஸ்
அடுத்த 15 நாட்களுக்குள் இந்திய சந்தை மற்றும் 129 நாடுகளுக்கு வந்து சேரும். அதன் உண்மையான புகைப்படங்கள்.

விரிவான விளக்கம்
கோவிட்-19 பெரும் தொற்று இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகையில் அதை குணப்படுத்தும் மருந்துகள் என சில மருந்துகளின் பெயர்கள், புகைப்படங்கள் ஃபார்வர்டு செய்யப்பட்டு வருகின்றன. மேற்காணும் ஃபார்வர்டு செய்தியில் இருக்கும் முரண்பட்ட தகவல்களை இக்கட்டுரையில் விளக்கி உள்ளோம்.
1.ஃபாவிபிராவிர் (Favipiravir)
ஃபார்வர்டு தகவலில் "Remdesivir" ஊசியின் பெயரைக் குறிப்பிட்டு விட்டு " Favipiravir " மாத்திரை அட்டையின் புகைப்படங்களைப் பயன்படுத்தி உள்ளார்கள். முதலில் Favipiravir மாத்திரை குறித்து காணலாம்.

ஃபாவிபிராவிர் (Favipiravir) என்ற பெயர் கொண்ட மாத்திரையின் விலை 103ரூ எனக் கூறப்படுகிறது. குறைந்த மற்றும் மிதமான கோவிட்-19 பாதிப்பைக் கொண்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக க்ளென்மார்க் மருந்துகள் ஆன்டிவைரல் மருந்து நிறுவனம் ஃபாவிபிராவிர் மருந்தை அறிமுகப்படுத்திய பின்னர் மருத்துவர் வல்லுநர்கள் பெரும் கொள்ளை நோய்க்கு இம்மருந்து " மேஜிக் புல்லெட் " இல்லை என எச்சரித்தனர். இருப்பினும், இந்தியா போன்ற நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை குறைக்க உதவுக்கூடும் எனக் கூறுவதாக வெளியாகி இருக்கிறது.

ஃபாவிபிராவிர் (Favipiravir)-ன் 200 மில்லிகிராமில் 34 மாத்திரைகள் கொண்ட ஒரு பாக்கெட் அதிகபட்சமாக ரூ.3500 விற்பனை செய்யப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதற்கான உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தலுக்கு டி.ஜி.சி.ஐ அனுமதி அளித்து இருக்கிறது.
2. ரெம்டெசிவர் (Remdesivir) :
கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக ரெம்டெசிவர் மருந்தை கோவிஃபார் என்ற பெயரில் இந்தியாவில் பயன்படுத்துவற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்து உள்ளது. ஐதராபாத்தில் உள்ள இந்த நிறுவனத்தின் தொழிற்சாலையில் ரெம்டெசிவர் உற்பத்தி செய்யப்படும் என அந்நிறுவனத்தின் தலைவர் தெரிவித்ததாக செய்தியில் வெளியாகி இருக்கிறது. 100 மில்லி லிட்டர் ஊசி மருந்தின் விலை 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது. இது அவசர சிகிச்சைக்கான மருந்து என்பதால் நேரடியாக சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளுக்கே வழங்கப்படும், மருந்தகங்களில் கிடைக்காது.

ரெம்டெசிவர் மருந்தை எஃப்.டி.ஏ " அவசரநிலை " மருந்தாக மருத்துவமனையில் பயன்படுத்தவே அனுமதி அளித்து உள்ளது. கொரோனாவிற்கு தீர்வு என அங்கீகரிக்கவில்லை. மருத்துவமனையில் அவசரநிலையில் இருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் மருந்துகள் பல பயன்பாட்டில் உள்ளன. அனைத்தும் முழுமையான தீர்வு எனக் கூறி விட முடியாது.
மருத்துவர்களின் பதில்கள் :
ஃபார்வர்டு செய்யப்பட்ட செய்தியில் இருக்கும் மருந்துகள் குறித்து மருத்துவர் பிரவீன் அவர்கள் கூறுகையில், " இவ்விரு மருந்துகளும் உண்மையே.. ரெம்டெசிவர் எனும் மருந்து சிப்லா எனும் நிறுவனம் மூலம் கிடைக்கிறது. இது ஒரு வாரத்திற்குள் வரும். இரண்டு மருந்துகளும் சோதனை மருந்துகளே. அவிகன் என்பது ஜப்பானில் ஃபாவிபிராவிர் உடைய வர்த்தக பெயர். ஜப்பானிலும் அதே மருந்து அனுமதிக்கப்பட்டு உள்ளது. இவை கொரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே. எந்தவொரு மருந்தும் கோவிட்-19 தொற்றுக்கு முழுமையான பலன் அளிப்பதாக நிரூபிக்கப்படவில்லை. இந்த மருந்துகள் அனைத்தும் நோய் பாதித்த மக்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சில விளைவுகளைக் கொண்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்து " எனத் தெரிவித்தார்.
டெக்சாமெத்தசோன் எனும் மருந்தும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது குறித்து மருத்துவர் அரவிந்த் கூறுகையில் " டெக்சாமெத்தசோன் என்பது ஸ்டீராய்டு வகை மருந்து. பொதுவாக சிறுநீரகத்திலேயே ஸ்டீராய்டு வகை மருந்துகள் சுரக்கின்றன. அதுபோலவே வெளியில் ஸ்டீராய்டு வகை மருந்தை உற்பத்தி செய்து அளிக்கிறோம். கொரோனா பாதித்த 10 பேர் இருந்தால் அந்த 10 பேருக்கும் ஸ்டீராய்டு மருந்து கொடுக்க வேண்டிய அவசியமில்லை. சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்பட்டு வெண்டிலேட்டரில் வைக்கப்படுபவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் தூண்டப்படும் ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்கு டெக்சாமெத்தசோன் ஸ்டீராய்டு மருந்து அளிக்கப்படுகிறது.
டெக்சாமெத்தசோன் ஸ்டீராய்டு முதல்முறையாக இப்போது தான் கொடுக்கப்படுகிறது என நினைத்து விடக்கூடாது. பல ஆண்டுகளாகவே டெக்சாமெத்தசோன் போன்ற ஸ்டீராய்டு மருந்துகள் பல நோய்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் டெக்சாமெத்தசோன் என்கிற ஸ்டீராய்டு மருந்து உயிர் காக்கும் மருந்தாக இருக்கலாம் என ஓர் ஆய்வு முடிவை வெளியிட்டு இருந்தனர். ஆனால், கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்த நமது தமிழக அரசு மருத்துவர்கள் இந்த நோயின் வீரியம் இப்படித்தான் இருக்கும் என கணித்து வெண்டிலேட்டரில் உள்ளவர்கள் உள்ளிட்ட பல பிரச்சனைகளில் உள்ளவர்களுக்கு முதலில் இருந்தே கொடுத்து வருகிறார்கள். ஸ்டீராய்டு மருந்தை எவ்வளவு கொடுக்க வேண்டும், எத்தனை நாட்கள் கொடுக்க வேண்டும் என தீர்மானிப்பார்கள். மூன்றாவதாக, ஸ்டீராய்டு மருந்துடன் ஆக்சிஜன், வெண்டிலேட்டர் , ஆன்டிவைரல் மருந்து, வலி மருந்து உள்ளிட்டவையும் அளிக்கப்படும். ஆக, அதுமட்டுமே மருந்து அல்ல.
கொரோனா பாதிப்பு அதிகம் பரவினாலும் பெரும்பாலானோர் இங்கு காப்பாற்றப்பட்டுள்ளனர். ஹைட்ராக்சிகுளோரோகுயினை மருந்து குறித்து தகவல் வெளியான நிலையில் மக்கள் அதிகமான வாங்கி வைத்துக் கொண்டனர். இது மாரடைப்பு பிரச்சனை ஏற்படுத்தும் மருந்து என்பதால் மருத்துவரின் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக்கூடாது எனத் தெரிவித்து இருந்தோம். டெக்சாமெத்தசோன் ஸ்டீராய்டுக்கும் அதேதான் கூறுகிறோம். கொரோனா வந்த அனைவருக்கும் இதைக் கொடுக்க போவதில்லை. ஆகையால், மருத்துவரின் அனுமதி இல்லாமல் யாரும் வாங்க வேண்டாம். வருமுன் காக்கும் மருந்தும் அல்ல. இதனால் பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் " எனக் கூறி உள்ளார்.
டெக்சாமெத்தசோன் ஸ்டீராய்டு மருந்து கொரோனா நோயாளிகளுக்கு முழுமையான தீர்வு அல்ல. இறப்பு சதவீதம் குறைகிறது என்பதால் இம்மருந்து பயன்படுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இக்கட்டுரையில் ஃபாவிபிராவிர், ரெம்டெசிவர் மற்றும் டெக்சாமெத்தசோன் ஆகிய மூன்று மருந்துகள் குறித்தும் பார்த்துள்ளோம். கொரோனா வைரஸிற்கு இதுதான் மருந்து என எதுவும் நிரூபிக்கப்படாத நிலையில் பாதிப்பை குறைக்கும் மருந்துகளே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கொரோனாவிற்கு பயன்படுத்தப்படும் மருந்து என ஊடகங்களில், சமூக வலைதளங்களில் நீங்கள் பார்க்கும் மருந்துகள் அனைத்தையும் கொரோனாவிற்கு தீர்வு என எண்ணி விட வேண்டாம். வருமுன் காப்பதாக நினைத்து மாத்திரைகளை முன்பே வாங்கி வைத்துக் கொள்வதும் தவறாகும்.
முதலில் ஒரு மருந்தின் பெயரை பொதுவெளியில் வெளியிடுவது சரியான அணுகுமுறை அல்ல. ஏற்கனவே ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து பயன்படும் என ட்ரம்ப் கூறும் போது சர்வதேச ஊடகங்கள், இந்திய ஊடகங்கள் கூட பெரிதுப்படுத்தினர். அதை சரியான அணுகுமுறை அல்ல என நாம் பதிவு செய்து இருந்தோம். ஏனெனில், ஒரு மருந்தின் பெயரை கூறும் போது தவறான சந்தை உருவாகும், விலை அதிகரிக்கும். பாராசிட்டமால் கூட சரியாக கிடைக்கவில்லை என சமூக வலைதளங்களில் பார்க்க முடிந்தது. அப்படி இருக்கையில், மருந்தின் பெயரைக் கூறும் போது சுய மருத்துவமாக எடுத்துக் கொண்டு அதன் மூலம் சிக்கல் வர வாய்ப்பு உள்ளது.
அதேமாதிரி, ஹைட்ராக்சிகுளோரோகுயின் பல சிக்கல்களை உருவாக்கியது, முறையான இ.சி.ஜி உள்ளிட்டவையை எடுக்காமல் மருந்தை எடுத்துக் கொள்வது ஆபத்து என செய்திகள் வந்தன. ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்திலும் சரியான அளவை எடுக்கவில்லை என அமெரிக்க தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அப்படியான சூழலில், எந்தவொரு மருந்தும் போதுமான மருத்துவ ஆலோசனைக்கு உட்படுத்தி தான் பயன்படுத்த வேண்டும். அதைவிடுத்து, இந்த மருந்து உதவும் என பரப்புவதும், அதை ஒரு தனிநபர் தெரியாமல் பயன்படுத்தினால் சிக்கலை உருவாக்கும் என்பதை அறிந்துமருத்துவ ஆலோசனைக்கு உட்பட்டே எதையும் செய்க.
Links :
Remdesivir: Five Indian and Pakistani firms to make drug to 'fight coronavirus
Remdesivir For COVID-19 Treatment To Be In Market By Month-End: Sources
Glenmark Launches COVID-19 Drug Favipiravir At Rs 103 Per Tablet
Dexamethasone is already being used for COVID-19 patients, says epidemiologist Dr Gopichand
Coronavirus (COVID-19) Update: FDA Issues Emergency Use Authorization for Potential COVID-19 Treatment
Coronavirus Disease 2019 (COVID-19) EUA Information

சுருக்கமாக
இரு வேறு மருந்துகள் மற்றும் முரண்பட்ட தகவல்களுடன் பகிரப்படும் வாட்ஸ் அப் பார்வர்டு செய்தியை பகிர வேண்டாம். இவ்விரு மருந்துகளும் கோவிட்-19 தொற்று அதிகம் உள்ளவர்களுக்கு பயன்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. Remdesivir, Favipiravir மற்றும் டெக்சாமெத்தசோன் மருந்துகள் தொடர்பாக மருத்துவர்கள் அளித்த தகவலை விரிவாக காண்போம்.